இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகிவரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டது. அண்ணாத்த ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, இயல்பு நிலைக்காக காத்திருந்தது படக்குழு. இந்நிலையில் தமிழக தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முடிந்த நிலையில் 7-ஆம் தேதி தனி விமானம் மூலம் மீண்டும் ஷுட்டிங் பணிகளை துவங்க ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த்.





சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். பல ஆண்டுகள் கழித்து மீனா மற்றும் குஷ்பூ ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராமோஜி பிலிம் சிட்டியில் மிக வேகமாக படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது .


 


தீபாவளி அன்று படம் வெளியாகவேண்டும் என்பதற்காக படத்தின் வேலைகள் மிக விரைவாக நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து தெலுங்கானாவில் கொரோனா காரணமாக இரவு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதால் இரவு நேர ஷூட்டிங் தடைபட்டுள்ளது. தெலுங்கானா அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .




இந்நிலையில் நேற்று தனக்கான ஸ்டைலில் ஹைதராபாத் வந்தடைந்தார் நடிகை நயன்தாரா . இவரின் ஏர்போர்ட் லுக் எப்பொழுதுமே வைரல் ஆகும் . அதே போல் இந்த ஏர்போர்ட் லுக் இணையத்தில் இன்று வைரலாகி இருக்கிறது . படத்தின் ஷூட்டிங் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் . கண்டிப்பா இந்த வருடம் தீவாளி அன்று படம் வெளிவர கூடும் என்று கூறப்படுகிறது .