மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் தயாராகியுள்ள படம் கனெக்ட். 2015ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற ஹாரர் திரைப்படமான மாயா படத்திற்கு பிறகு மீண்டும் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கைகோர்த்த இப்படமும் ஒரு ஹாரர் படமாகவே வெளியானது. 



மீண்டும் ஒரு ஹாரர் படம் :


மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். அஸ்வின் சரவணன்  இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளியான படம் கனெக்ட். லாக்டவுன் சமயத்தில் படத்தின் கதை நகர்வது போல அமைக்கப்பட்டு இருந்த இந்த கதையில் நயன்தாராவின் குழந்தைக்கு ஆன்லைன் கேம் மூலம் பேய் பிடித்ததாகவும், அதை விரட்ட அனுபம் கெரை அழைக்கின்றனர். இவை அனைத்தும் ஆன்லைனிலேயே நடப்பது போல அமைக்கப்பட்டு இருந்த இந்த கதை கலவையான விமர்சனங்களை பெற்றது.






நயனின் திட்டம் :


நயன்தாரா நடிப்பில் வெளியான O2 திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. ஒரு சில இடங்களில் கனெக்ட் திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ஒரு சில இடங்களில்  எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற தவறியது என தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் மதுரையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வேண்டும் என மிகவும் ஆவலாக இருந்த நயன்தாராவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 







ஏமாற்றத்தில் நயன்தாரா :


நயன்தாரா மதுரையில் கனெக்ட் படத்திற்கு ரசிகர்கள் எந்த அளவிற்கு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை நேரில் காண வேண்டும் என்பதற்காக மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் சென்று பார்க்க திட்டமிட்டு திரையரங்க உரிமையாளர்களிடம் அனுமதியும் பெற்றுள்ளார். அந்த வகையில் மதுரைக்கு கிளப்ப நயன்தாரா தயாரானபோது மதுரை திரையரங்கின் உரிமையாளர் போன் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் இங்கே வரவேண்டாம் என தெரிவித்துள்ளார். அதற்கு அவர் காரணமாக கூறிய தகவல் நயன்தாராவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கனெக்ட் படத்தை திரையரங்கில் பார்க்க ஒருவர் கூட வரவில்லை அதனால் நீங்கள் இங்கே வரவேண்டாம் என கூறியதை கேட்ட நயனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.