Kamal Haasan: விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2, கல்கி உள்ளிட்ட படக்களில் பிசியாக கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுமே அடுத்த ஆண்டு ரிலீசாகும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க உள்ளார். இதனிடையே வினோத் இயக்கத்தில் பெயரிடப்படாத KH 233 மற்றும் மணிரத்னம் இயக்கவுள்ள  KH 234 படங்களிலும் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.


இப்படி  உலக நாயகன் பிசியாக இருக்கும் நிலையில் அவரது பிறந்த நாளில் இரண்டு தரமான சம்பவங்கள் நடக்க இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி  KH 234 படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதே கூட்டணியில் 1987ம் ஆண்டு வெளிவந்த நாயகன் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. படத்தில் வேலுநாயக்கராக நடித்திருந்த கமல் நடிப்பில் மிரட்டி இருப்பார். இன்றும் நாயகன் கமலை ரசிகர்கள் கொண்டாடாமல் இல்லை. 


இந்த நிலையில் வரும் நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாள் என்பதால் அன்று மீண்டும் நாயகன் படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அதே நாளில் கமல்ஹாசன் நடிக்கும் KH 234 படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகும் என கூறப்படுகிறது. மீண்டும் கமல்ஹாசன், மணிரத்னம் இணைய உள்ளதால் KH 234 படம் நாயகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா என கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது. இதில் கமலுடன் இணைந்து ஜெயம்ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி மேலும் சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது.






கமலின் பிறந்த நாளை ஒட்டி நவம்பரில் நாயகன் ரீ ரிலீஸ், KH 234 படத்தின் டைட்டில் என டபுள் டிரீட்டாக ரசிகர்களுக்கு இருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ரீ ரிலீசான கமலின் வேட்டையாடு விளையாடு படம் பாக்ஸ் ஆபிசில் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து யூடியூபில் ஹேராம் படம் வெளியானது. தொடர்ந்து கமல் மற்றும் அமலா நடித்திருந்த பேசும் படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது. அடுத்தடுத்து கமலின் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். 


மேலும் படிக்க: Entertainment Headlines Sep 20: விஜய் ஆண்டனி மகளுக்கு இறுதி அஞ்சலி.. விஜய் அப்பாவுடன் இணையும் அஜித்.. இன்றைய சினிமா செய்திகள்!


Marimuthu: மாரிமுத்துவுக்கு நிகர் அவர் தான்... குணசேகரன் கதாபாத்திரத்துக்கு நேர்ந்த சோகமான முடிவு!