பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் தனது காரை தவிர்த்து, அதற்கு பதிலாக லோக்கல் ரயிலில் பயணித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நவாசுதீன் தற்போது இந்தியத் திரையுலகில் மிகவும் திறமையான மற்றும் சிறந்த நடிகர்களில் ஒருவர் ஆவார். அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் திறமை ஆகியவற்றால் வெள்ளித்திரையில் பல மறக்கமுடியாத நடிப்பை வழங்கியுள்ளார். இதனால் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளார். தமிழில் ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் நடித்து பிரபலமானவர்.


இருப்பினும், இவ்வளவு சிறந்த திறமை மற்றும் பிரபலமாக நடிகராக இருந்தும், நவாசுதீனுக்கு மற்ற சாமானியர்களைப் போல வாழ்க்கையை நடத்துவதில் எந்தக் கவலையும் இல்லை என்பது போல் தெரிகிறது. ஏனென்றால், நடிகர் சமீபத்தில் தனது காரை தவிர்த்து, மும்பையின் உள்ளூர் ரயிலில் பயணித்துள்ளார். 


நவாசுதீன் சித்திக் மும்பையில் உள்ள மீரா சாலையில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். நகரத்தின் மறுபுறத்தில் ஒரு முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, உள்ளூர் ரயிலில் பயணம் செய்ய முடிவு செய்தார். ஸ்டேஷனிலும் ரயிலிலும் எளிமையான சாதாரணமாக அவர் பயணம் செய்துள்ளார். ஒரு தொப்பி,  முகமூடி மற்றும்  சன்கிளாஸ்களை அணிந்து பயணித்த அவரை பயணி ஒருவர் கண்டுபிடித்து வீடியோ எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வீடியோ:






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண