என்னிடம் ஆடு,மாடுதான் இருக்கு எனவும் என்னிடம் ரூ. 610 கோடி இல்லை எனவும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை “என்னிடம் ஆடு,மாடுதான் இருக்கு. ரூ. 610 கோடி இல்லை. திமுக அவதூறு வழக்கு தொடுக்கும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை. நான் ஒரு சாதாரண விவசாயி. 6 மணிவரை பாஜக அலுவலத்தில்தான் இருப்பேன். தொட்டாம்பட்டியில் இருந்து வந்த என்னை தொட்டு பார்க்கட்டும்” எனத் தெரிவித்தார். 


நீதிமன்றத்தில் உங்கள் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் அனுப்பிய நோட்டீஸ் எனக்கு கிடைத்தது. நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து கொள்கிறேன். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்திளார் சந்திப்பில், நான் அதிமுக அமைச்சர்களை மிரட்டி பணம் வாங்கியிருக்கிறார் என்று சொல்லியிருந்தார். நான் இன்னும் ஆறு மணி நேரம் பா.ஜ.க. அலுவலகத்தில் இருப்பேன். அவர்களிடம் உண்மையான ஆதாரம் இருக்கு என்றால் என்னை கைது செய்யுங்கள். இப்போது மணி 12.15. இன்னும் ஆறு மணி நேரத்தில் அதாவது 6:15 மணி வரை நேரம் இருக்கிறது. முடிந்தால் முழு போலீஸ் படையுடம் வந்து என்னை கைது செய்யுங்கள்.


நான் சுயமாக விவசாயம் செய்து, உழைத்து தனி ஒருவனாய் உருவாகியிருக்கிறேன். ஆர்.எஸ்.பாரதி போல இல்லை. திமுக கட்சியில் இருக்கும் செயலர் போல எந்த குடும்பத்திற்கும் கப்பம் கட்ட நான் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். தமிழக மக்களின் நலன் என்ற ஒற்றை நோக்கத்தோடு தனி ஆளாக அரசியலுக்கு வந்துள்ளோம். உங்களைப் போல குடும்ப பிண்ணனி, பாரம்பரியம் எல்லாம் எனக்கு இல்லை. மீது அவதூற வழக்கு தொடரவோ, டிஃபர்மேசன் நோட்டீஸ் கொடுப்பதற்கு கூட திமுகவிற்கு தகுதி இல்லை. 6 மணி நேரத்தில் நீங்கள் கைது செய்யவில்லை என்றால், தமிழக மக்கள் நீங்கல் சொல்வதை இனி ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் ஆளுங்கட்சி. ஆதாரங்களுடன் பேசுங்கள். என்னை பற்றிய அவதூறுகளுக்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? தனியாக இருக்கிறேன். தொட்டுப் பாருங்கள். நீங்கள் அவதூறு பரப்புவீர்கள். அதை எதிர்த்து கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு ரூ.100 கோடி கொடுப்பீர்கள். இங்குள்ள பத்திரிக்கைகள் என்னை பற்றி தவறாக எழுதுவார்கள். ஆனால் அதை பற்றி அரசாங்கம் கண்டுகொள்ளாது. அதை பத்திரிக்கை சுதந்திரம் என்பீர்கள். தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லவே இல்லை.  பா.ஜ.க. மாநிலத் தலைவர் பதிவி காலம் முடியும் வரை 1000 அவதூறு வழக்கை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். தொட்டாம்பட்டியில் இருந்து கோபாலபுரத்தை எதிர்க்க வந்த விவசாயி நான்.


எனக்கு பேச என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள். நான் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றுள்ளேன். வேறு என்ன தகுதி வேண்டும். எனக்கு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லை. ஆனால், என்னால் ஒரு முதல்வரை உருவாக்க முடியும்.  தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பை சாப்பிட்டவர்கள் என்ன ஆனார்களோ?என் 9 ஆண்டு காலம் காவல் பணியில் எப்படி செயல்பட்டேன் என பாருங்கள். உங்களை போல ஒரு கட்சியோடு அண்டி பிழைத்து இருப்பது நானல்ல நீங்கள்தான். நான் தனியாக உழைத்து வளர்ந்தவன்.


மத்திய அரசு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, நிலுவைத் தொகைக்கும் கொடுக்க வேண்டிய தொகைக்கும் வித்தியாசம் இருக்கிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை வழங்கும். நான் பேசியதில் எதையேனும் ஒன்றை தவறு என நிதியமைச்சரை கூற சொல்லுங்கள்.


பெட்ரோல் டீசல் விலை குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், விலைவாசி உயர்வை மத்திய அரசு சிறப்பு கவனத்தோடு கையாள்கிறது.  ,மால்கள் கட்டுவதில் மகிழ்ச்சியடையும் முதல்வரை இப்போதுதான் பார்க்கிறேன். நாங்கள் ஆதாரத்துடந்தான் கேள்வி கேட்கிறேன். எத்தனை நாள் உங்களால் தமிழக மக்களை முட்டாள் ஆக்க முடிகிறது என பார்ப்போம்? என்றார். 


தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் துபாய்க்குச் சென்றதை அவதூறாகப் பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு திமுக சார்பில் அண்ணாமலைக்கு அனுப்பியிருந்தார்.


அதில், முதல்வர் ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போ-க்கு சென்றதைப் பொதுவெளியில் அவதூறாகப் பேசியதற்காக, 24 மணி நேரத்துக்குள் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ரூ.100 கோடி நஷ்ட ஈடாக முதல்வர் நிவாரண நிதிக்கு 2 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும். இதை செய்யத் தவறினால், சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.