ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஆனந்திதா ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள பாலிவுட் திரைப்படம் 'ஹட்டி'. அக்ஷத் அக்சத் அஜய் சர்மா இயக்கும் இப்படத்தில் நவாசுதீன் சித்திக் ஒரு திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் எப்படி இந்த  கதாபாத்திரத்துக்கு தன்னை தயார் படுத்தி கொண்டார் என்பதை ஒரு புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 


 



கவனத்தை ஈர்த்த மோஷன் போஸ்டர் :


ஒரு பழிவாங்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'ஹட்டி' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான போது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நவாசுதீன் சித்திக்கின் தோற்றம் அடையாளம் காண முடியாத அளவிற்கு இருந்தது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. யாரும் எதிர்பார்க்காத ஒரு தோற்றத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த, கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என பலரும் பாராட்டினர். இந்த மோஷன் போஸ்டர் வெளியானதில் இருந்து படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நவாசுதீன் சித்திக் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் திருநங்கைகளின் மத்தியில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டது லைக்ஸ்களை குவித்து வருகிறது. 


 






 


எப்படி என்னை தயார் படுத்தினேன் ?


நவாசுதீன் சித்திக் தனது கதாபாத்திரம் குறித்து ஒரு நேர்காணலில் கூறுகையில், அது ஒரு கேலிச்சித்திரமாக இருக்க நான் விரும்பவில்லை. இப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் நான் 20-25 திருநங்கைகளுடன் தங்கி அவர்களுடனேயே பணிபுரிந்தேன். அவர்களோடு பயணித்த சமயத்தில் நான் அவர்களை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. அது நான் "ஹட்டி" படத்தில் நடிக்க வெகுவாக உதவியது என்றார். 


 







ரசிகர்களின் யூகம் :


ஹட்டி திரைப்படத்தின் போஸ்டர் வெளியான போது ரசிகர்கள் யூகிக்க முடியாமல் பல பாலிவுட் நடிகைகளின் சாயல் இருப்பதாக கூறியிருந்தார்கள். சிலர் அர்ச்சனா பூரன் சிங் என கூற கஜோல், பிரியங்கா சோப்ரா, ரவீனா டாண்டன் என அடுத்தடுத்து பல பாலிவுட் முன்னணி நடிகைகளின் பெயர்களாக அடுக்கினார்கள். ஹட்டி திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.