சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'பேட்ட' படத்தில் மிரட்டலான வில்லனாக சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். பல திரைப்படங்களில் மிகவும் நேர்த்தியான யதார்த்தமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் வல்லவரான நவாசுதீன் சித்திக் தற்போது தனது குடும்ப விவகாரம் சம்பந்தமாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். 


 



 


நவாசுதீன் சித்திக் மீது மனைவி வழக்கு பதிவு :


நடிகர் நவாசுதீன் சித்திக் மற்றும் அவரது மனைவி ஆலியாவுக்கும் இடையில் விவாகரத்து செய்த பிறகு தொடர்ச்சியாக பிரச்சனை எழுந்து கொண்டே இருக்கிறது. கணவர் நவாசுதீன் சித்திக் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 2020ம் ஆண்டு துபாய்க்கு சென்று விட்டார். தன்னுடனேயே குழந்தைகளையும் துபாய்க்கு அழைத்து சென்று விட்டார் ஆலியா. கடந்த மாதம் குழந்தைகளுடன் இந்தியா வந்திறங்கியுள்ளார் ஆலியா. 


குழந்தைகள் எங்கே ?


ஆலியா இந்தியா வந்ததில் இருந்து ஏதாவது ஒரு மோதல் இருவருக்கும் இடையில் நடந்து கொண்டே இருக்கிறது. அது முடிந்த பாடாகவே இல்லை. அந்த வகையில் பிரிந்து சென்ற தனது மனைவி ஆலியாவின் பாதுகாப்பில் உள்ள தனது இரண்டு மைனர் குழந்தைகளின் இருப்பிடத்தை பற்றி தெரிந்து கொள்ள மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் நவாசுதீன். அந்த வகையில் குழந்தைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகளை பேசி தீர்க்குமாறு நீதிமன்றம் அவர்களுக்கு பரிந்துரைத்தது. தற்போது குழந்தைகள் இருவரும் துபாயில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்கள். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் இருக்கிறார்கள் என்று நவாசுதீன் சித்திக் கூறியிருந்தார். அதனால் அவர்களின் இருப்பிடம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே அவரின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் சொத்து பிரச்சனையும் நிலவி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. 


தெலுங்கில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகிவரும் "சைந்தவ்" என்ற திரைப்படத்தில் நடிகர் வெங்கடேஷுடன் நவாசுதீன் நடித்து வருகிறார்.