நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ‘நவரசா’ ஆந்தாலாஜி வெப் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுள் சினிமா துறையும் ஒன்று. இந்நிலையில் கொரோனாவால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் ’ நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தென்னிந்திய சினிமா துறையினர் முன்னெடுத்துள்ளனர். நவரசங்களை அடிப்படையாக வைத்து ஒன்பது குறும்படமாக எடுக்கப்பட்ட இந்த தொடரை ஒன்பது இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வஸந்த் ராய், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன் பிரசாத் ஆகியோர் இயக்கியுள்ள இதில், சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பிரசன்னா, சித்தார்த், பார்வதி, ரோகிணி, ரித்விகா, யோகி பாபு, பாபி சிம்ஹா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். “நவரசா” ஆந்தாலஜி வெப் சீரிஸில் பணியாற்றிய கலைஞர்கள் யாரும் இதற்காக சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரை மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா இணைந்து தயாரித்துள்ளனர்.
ஒவ்வொரு கதைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஜிப்ரான், அருள் தேவ், கார்த்திக், ரான் ஈதன் யோஹன்னான் உள்ளிட்ட 9 பேர் இசையமைத்துள்ளா இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படம் ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது.
1.காதல்
காதலை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ள குறும்படத்திற்கு ’கிட்டார் கம்பி மேல நின்று ’ என பெயர் வைத்துள்ளனர். இதனை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். சூர்யா கதாநாயகனாகவும், ப்ரயாகா மார்டின் கதாநாயகியாவும் நடித்துள்ளனர்.
2. கருணை
கருணையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதைக்கு ’எதிரி’ என பெயரிட்டுள்ளனர்.இதனை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
3.சினம்
கோபத்தை மையப்படுத்திய கதைக்கு ’ரௌத்திரம் ’என பெயரிடப்பட்டுள்ளது. அரவிந்த் சாமி இயக்கத்தில் ரித்விகா, ஸ்ரீராம், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
4. அருவருப்பு
அருவருப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை வஸந்த் சாய் இயக்கியுள்ளார். இதற்கு 'பாயசம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், ரோகினி, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
5.துணிவு
துணிவை மையப்படுத்தி உருவாகியுள்ள கதைக்கு . 'துணிந்த பின்' எனப் பெயரிடப்பட்டுள்து . இந்தப் குறும்படத்தில் அதர்வா, அஞ்சலி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதை சர்ஜுன் இயக்கியுள்ளார்.
6.அச்சம்
பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள தொகுப்பை ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். இதற்கு 'இன்மை' எனப் பெயரிடப்பட்டுள்ளது . இதில் சித்தார்த், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
7.அமைதி
அமைதியை மையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பகுதிக்கு ‘பீஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
8.வியப்பு
ஆச்சரியத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த பகுதியை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். 'ப்ராஜெக்ட் அக்னி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, பிரசன்னா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
9.நகைச்சுவை
முழுக்க முழுக்க காமெடி கதைக்களம் கொண்ட இந்த குறும்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். 'சம்மர் ஆஃப் 92' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பகுதியில் யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.