தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் கார்த்திக். 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். இளம் ஜோடிகள், அக்னி நட்சத்திரம், வருஷம் பதினாரு, கிழக்கு வாசல், பொன்மணி, பிஸ்தா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூவேலி, தானா சேர்ந்த கூட்டம், அநேகன், மிஸ்டர் சந்திரமௌலி என்று ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகர் கார்த்திக்.


இவரது நடிப்பு மட்டுமின்றி நடை, உடை, பாவணையே ஆயிரம் மொழி பேசும். அந்தளவிற்கு நடிப்புத் திறமையை கொண்டவர். இந்த நிலையில் தான் நடிகர் கார்த்திக் உடன் ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து இயக்குநரும், தயாரிப்பாளருமான பாலாஜியின் மகன் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,  "இயக்குநர் பாஸ்கர் இயக்கத்தில் கார்த்திக் நடித்த படம் பக்கத்து வீட்டு ரோஜா.  இந்தப் படத்தில் கார்த்திக் உடன் இணைந்து ராதா, கவுண்டமணி, செந்தில், தியாகு, மனோரமா, ஜனகராஜ், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடிக்கும் போதே கார்த்திக் ஒரு பிளே பாய். படப்பிடிப்பின் போது ராதாவிடம் பண்ணாத சேட்டைகள் இல்லை. இதையெல்லாம் அப்பா பார்த்துக் கொண்டிருப்பாராம். அப்போது, இவர்களை வைத்து எல்லாம் படம் எடுக்க வேண்டியிருக்கிறது என்று தலையில் அடித்து கொண்டு புலம்புவாராம்.


  எப்படியோ அந்தப் படம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், இந்த படத்திற்கு பிறகு மீண்டும் கார்த்திக் மற்றும் அப்பாவும் இணைந்து சட்டத்தின் திறப்பு விழா படத்தில் பணியாற்றினார்கள். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷோபனா நடித்திருந்தார். நிழல்கள் ரவி, சுமித்ரா, குயிலி, டெல்லி கணேஷ் என்று எல்லோருமே நடித்திருந்தார்கள். இந்தப் படமும் ஹிட் படமாக அமைந்தது.


இந்த நிலையில் தான் சக்கரவர்த்தி படத்திற்கு, கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஷூட்டிங்கிற்கு எல்லாம் ரெடியாக இருந்தார்கள். ஆனால் கார்த்திக் மட்டும் வரவில்லை. அவரது மேனேஜருக்கு போன் போட்டார்கள். எனினும் யாரிடமும் எந்த பதிலும் இல்லை. கடைசியில் அவர் அடையாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு நானும் அப்பாவும் அந்த ஹாஸ்பிடலுக்கு சென்றோம். ஆனால் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சும்மா, எங்களை ஏமாற்றவே அப்படி உடலில் ட்ரிப்ஸ் ஏறுவது போன்று ஆக்‌ஷன் செய்தார். படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் ஒரு சிறந்த நடிகராக தான் இருந்தார். 


அப்பா என்ன ஆச்சு என்று கேட்க, நேற்றிலிருந்து ஒரே குளிர் ஜூரம் என்று கார்த்திக் கூற, அதற்கு அப்பாவோ நேற்று கேட்கும் போது ஏதோ கிளப்பில் இருப்பதாக சொன்னீயே என்றார். பின்னர் ஏதோதோ சொல்லி கார்த்திக் சமாளிக்க, கடைசியாக என் படத்தில் நடிக்க கை நீட்டி காசு வாங்கி இருக்கிறாய், ஷூட்டிங்கான அணைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க, நான் என்ன பண்ணுவது என நீயே சொல் என்கிறார்.


அது கார்த்திக் உச்சத்தில் இருந்த சமயம். பட வாய்ப்புகளும் அவரை தேடி வந்து கொண்டே இருந்தது. அதே நேரம் கார்த்திக் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இப்படியெல்லாம் செய்தார். இந்த ஹாஸ்பிடல் டாராமாவும் அதன் வெளிப்பாடு என்பதை என் தந்தை புரிந்து கொண்டார். கார்த்தியும் 2 நாட்களில் வந்து விடுகிறேன் என்றார். என் தந்தையும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிய நிலையில்,  3 ஆவது நாளில் ஷூட்டிங்கிற்கு வந்த கார்த்திக்கிற்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நடித்தாலும். அடுத்தடுத்து சில பிரச்சனைகள் கொடுத்து கொண்டு தான் இருந்தார் இதனால் சில மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.