நாட்டாமை படத்தின் டீச்சரை அவ்வளவு சீக்கிரமா யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு அன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி போக்கையான தட்டுகள் அனைவரும் ஜொள்ளு விட்ட ஒரு நடிகை தான் ரக்ஷா என்ற ராணி. நாட்டாமை டீச்சர் என்றால் இன்றும் நினைவுக்கு வரும் ஒரு முகம். அந்த டீச்சர் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
1992ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளியான 'வில்லுபாட்டுக்காரன்' திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரக்ஷா. தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்த ரக்ஷா அதற்கு பிறகு தான் நடிகையானார். அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தார்.
சரத்குமார் நடிப்பில் வெளியான 'நாட்டமை' திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான ரக்ஷா, அவ்வை சண்முகி, காதல் கோட்டை, ராசய்யா, கர்ணா என பல படங்களில் நடித்துள்ளார். விக்ரம் நடித்த 'ஜெமினி' படத்தில் மிகவும் பிரபலமான ஹிட் பாடலான 'ஓ போடு' பாடலில் விக்ரமுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட ரக்ஷவை இன்று வரை மறக்கவே முடியாது.
ரக்ஷா திருமணம் :
ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறையவே 1999ம் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது ஒரு சில திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற ரக்ஷா கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது.
சீரியல் மூலம் ரீ என்ட்ரி :
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் 'சீதா ராமன்' சீரியலில் ஒரு முக்கியமான ரோலில் ரக்ஷா என்ட்ரி கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பிறகு குடும்பம் குழந்தை என மிகவும் பொறுப்பான ஒரு இல்லத்தரசியாக இருந்து வந்த ரக்ஷாவின் இந்த ரீ என்ட்ரி அவரின் பல ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும் சமீபத்தில் இணையத்தில் வெளியான அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.