National Film Awards 2023: கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்ததற்காக பாலிவுட் நடிகை அலியா பட்டிற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


2021ம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைபப்ட தேசிய விருது இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்த படங்களை கொண்டு சிறந்த நடிகர், நடிகை, திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடல், தொழில்நுட்ப வல்லுநர் என பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. 


தமிழ் சினிமா சார்பில் ஆரியா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை, தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்கணன், சூர்யா நடித்த ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் தேசிய விருதை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இந்தியில், 2021ம் ஆண்டு பெரிதாக எந்த படங்களும் வெளிவராததால் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீசான கங்குபாய் கத்தியவாடி திரைப்படத்துக்கு விருது கிடைக்கும் என பேசப்படுகிறது.


மும்பையை சேர்ந்த பாலியல் தொழிலாளியாக இருந்த கங்குபாய் கத்தியவாடியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட உண்மை கதையில் கங்குபாயாக பாலிவுட் நடிகை அலியா பட் நடித்திருந்தார். பாலியல் தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கி மும்பையையே ஆட்டிப்படைத்த மிகப்பெரிய அரசியல் தலைவராக மாறிய கங்குபாயின் லட்சிய கதையில், அலியா பட் நடிப்பில் அசத்தி இருப்பார். 20 வயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஆலியா பட், தன்னை எப்படி அரசியல் தலைவராக மாற்றி கொண்டார் என்பதே கதையின் கிளைமாக்ஸாக இருக்கும். 






பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி போன்ற வரலாற்று திரைப்படங்களை இயக்கி பாலிவுட்டின் சிறந்த இயக்குநராக பேசப்பட்ட சஞ்சய் லீலா பன்சாலி எடுத்த கங்குபாய் கத்தியவாடியில் அலியா பட் அழகாக நடித்திருப்பார். படத்தில் காட்டப்படும் அவரின் வசீகர அழகும், அதற்கேற்ற நடிப்பும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. அடிமைத்தனத்தில் தொடங்கி அதிகாரத்தன்மை என ஓவ்வொரு காட்சியில் நடிப்பில் அசத்திய ஆசியா பட்டிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






கங்குபாய் கத்தியவாடி படத்திற்கு பிறகு ராஜமவுளி இயக்கிய ஆர்.ஆர்.ஆர்., டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா என அலியா பட் நடித்த திரைப்படங்களில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்தியில் கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஆலியா பட் தொடர்ந்து இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல இந்தி நடிகர் ரன்பீன் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 






மேலும் படிக்க: National Film Awards 2023 LIVE: 69வது தேசிய விருதுகள்...இந்த ஆண்டு எந்தெந்த படங்களுக்கு வாய்ப்பு?