National Film Awards 2022: சூரரைப் போற்று படத்திற்காக இந்த ஆண்டின் சிறந்த பின்னனி இசை அமைப்பாளராகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். திரையரங்கில் வெளியாகமல் மக்களிடத்தில் பெரும் அளவில் வரவேற்பினைப் பெற்ற சூரரைப் போற்று படத்தின் பின்னனி இசைக்காக இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு சிறந்த பின்னனி இசை அமைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழில் 2006ம் ஆண்டு இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தினையும் ஈர்த்து முத்திரை பதித்தவர். அசுரன், ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன், மதராசப் பட்டினம் ஆகிய படங்களில் மிகச் சிறந்த இசையினால் அனைவரையும் கட்டிப் போட்டவர். இவருக்கு ஏற்கனவே பலமுறை தேசிய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சூரரைப் போற்று படத்திற்காக முதல் தேசிய விருதினை இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் பெறுகிறார்.
68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அதில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திரைப்பட வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதிப் பெற்றுள்ளது. இந்தியாவில் திரைப்படம் எடுக்க உகந்த நகரமாக மத்தியப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழில் விருதுகள் பெற்றவர்கள் பற்றிய விபரங்களுக்கு,
தமிழ்:
சிறந்த படம் - சூரரைப்போற்று
சிறந்த நடிகர் - நடிகர் சூர்யா (சூரரைப்போற்று ) ( அஜய் தேவ்கனுடன் பகிர்ந்து கொள்கிறார்)
சிறந்த பின்னணி இசை - ஜிவி பிரகாஷ் குமார்
சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று )
சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)
சிறந்த வசனம் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
இதேபோல் tanhaji unsung warrior என்ற இந்தி படத்திற்காக நடிகர் அஜய் தேவ்கனுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் விருது மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தனுக்கு கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்