இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குநராக திரையுலக பயணத்தை தொடங்கிய வசந்த் கேளடி கண்மணி, ஆசை, அப்பு, ரிதம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்தை இயக்கியிருந்தார். எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஜெயமோகன், ஆதவன் ஆகியோரின் சிறுகதைகளை வசந்த் படமாக மாற்றியுள்ளார்.
படத்தில் மொத்தம் மூன்று கதைகள் இருக்கின்றன. இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த ஆந்தாலஜி சமீபத்தில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு தங்களது ஆதரவை கொடுத்தனர். மேலும், பெண்களை மையப்படுத்தி படம் எடுத்திருக்கும் வசந்த தனது காட்சியமைப்பிலும், கதை சொல்லல் விதத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் எனவும் பாராட்டினர்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் மத்திய அரசால் 68 வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் என சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத், சிறந்த தமிழ் படம் - இயக்குனர் வசந்த், சிறந்த துணை நடிகை - லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகிய பிரிவுகளில் அறிவிக்கப்பட்டது.
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகையாக தேசிய விருதுக்கு தேர்வான லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இது எனக்கு மிகப் பெரிய தருணம். ஒரு 'கனவு நனவாகும்' உணர்வு எப்படி இருக்கிறது என்பதை எடுத்துக் கொள்ள நேற்று முழுவதும் எனக்கு தேவைப்பட்டது. நான் மிகவும் எதிர்பார்த்த கனவு. இதை அனுபவிப்பதில் என் இதயம் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நிறைந்திருக்கிறது. என்னை வாழ்த்திய உங்கள் ஒவ்வொருவருக்கும் கோடான கோடி நன்றிகள்
மற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
என் மீது நம்பிக்கை வைத்த வசந்த் சாருக்கு ஸ்பெஷல் நன்றி. இந்த வெற்றி உங்களுக்கு தனிப்பட்டதாக இருந்தால், இதற்கு நீங்கள் ஏதாவது ஒரு வகையில் பங்களித்துள்ளீர்கள் என்பதையும், எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அம்மா, இது உங்களுக்கானது. பத்து வருடங்களுக்கு முன்பு, நான் என் வாழ்க்கையில் மிக மோசமான தவறு செய்கிறேன் என்று உலகம் முழுவதும் சொன்னது. நீங்கள் என்னை மட்டும் நம்பி என்னை இருக்க அனுமதித்தீர்கள். நான் மகிழ்ச்சி அடைகிறேன், இன்றைக்கு நீங்கள்தான் அதற்கு காரணம் அவர்களிடம் 'நான் சொன்னேன்!” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்