இங்கு காந்தியைக் கொன்றவர் கோட்சே என்று சொன்னால் பலருக்கும் கோபம் வரும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசும் போது, “ மகான் படத்தில் இருக்கும் வில்லனைத்தான் நான் கோட்சேவிற்கு எதிராக காட்டியிருக்கிறோம். படத்தில் “ உங்களைப் போன்ற ஒரு கொள்கை வெறி பிடித்தவர்தான் காந்தியை கொன்றார்” என்ற வசனத்தை வைத்திருந்தோம். அதை மாற்ற சொன்னார்கள். அதற்கு காரணமாக, நீங்கள் இங்கு காந்தியை பற்றிக்கூட ஏதாவது சொன்னால் கூட ஒத்துக்கொள்வார்கள். ஆனால் கோட்சே பற்றி ஏதாவது சொன்னால் பிரச்னை வந்துவிடும். அப்படித்தான் இந்த ஊர் இருக்கு. இங்கு காந்தியை செத்துவிட்டார் என்று சொல்லலாம். ஆனால் காந்தியை கோட்சே சுட்டார் என்று சொன்னால் இங்கு நிறைய பேருக்கு பேருக்கு கோபம் வரும். அதனால் படத்தில் இடம்பெற்றிருந்த அந்தவசனத்தைதான் காந்தியையும், காந்தியத்தையும் மொத்தமாக அழித்தீங்க என்று மாற்றி வைத்தேன். அது எனக்கு வருத்தமாக இருந்தது.
விக்ரம் தனது மகனுடன் இணைந்து நடித்து ஓடிடியில் வெளியான திரைப்படம் மகான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இந்தப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இந்தப்படத்தில் காந்திய கொள்கையை மீறியதால் விக்ரம் ஒரு பக்கம் வில்லனாக மாறி நிற்க, அதே காந்திய கொள்கையை மீறாத காரணத்தால் துருவ் இன்னொரு பக்கம் வில்லனமாக மாறிநிற்பார். இந்த முரண்களை ஆக்ஷன் ஜானரில் கார்த்திக் சுப்புராஜ் சொல்லியிருந்த விதம் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.