’நட்சத்திரங்கள் நகர்கிறது.. அடுத்த அப்டேட் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்!

’நட்சத்திரங்கள் நகர்கிறது’ படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகி இணையவாசிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Continues below advertisement

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாக உள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் வண்ணமயமாக போஸ்டர் வெளியாகி உள்ளது.

Continues below advertisement

காதல் கதை

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். சார்பட்டா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் ரஞ்சித் இறங்குவார் என எதிர்பார்த்த நிலையில், அட்டகத்தி பாணியில் அழகிய காதல் கதையை இயக்குவதாக முன்னதாக அறிவித்தார்.

தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது என்ற காதல் படத்தை சத்தமேயில்லாமல் ரஞ்சித் இயக்கி முடித்த நிலையில், இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்தது. 

பா.ரஞ்சித் தயாரிப்பில் முன்னதாக வெளியான குதிரைவால் படக் காட்சிகளும் போஸ்டர்களும் சர் ரியலிச பாணியில் இருந்த நிலையில், இப்படத்தின் முதல் போஸ்டரும் அதே பாணியில் வெளியாகி இருந்தது.

பால்புதுமையினரின் காதல் கதையா?

இந்நிலையில் தற்போது உலகப் படங்களின் போஸ்டர்கள் பாணியில் இப்படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியாகி இணையவாசிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும்  பால் புதுமையினரின் வானவில் அடையாளத்தைக் குறிக்கும் பின்னிணியில் இப்போஸ்டர் அமைந்துள்ள நிலையில், இப்படம் குயர் சமூகத்தினரின் காதல் கதையாக இருக்கலாம் என்றும் இணையத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

நட்சத்திரங்கள் அறிமுகம்

மேலும், வானவில்லின் வண்ணங்களைப் போல துடிப்பான, வானத்தில் நட்சத்திரங்களைப் போல பிரகாசமான இப்படத்தின் நட்சத்திரங்களை  நாளை மாலை 6 மணிக்கு அறிமுகம் செய்யவுள்ளதாகவும் ரஞ்சித் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனை இப்படத்தில் பணியாற்றவில்லை என்பது ரசிகர்களிடையே சோகத்தை உண்டாக்கியுள்ள நிலையில், இசையமைப்பாளராக தென்மா இப்படத்தில் பணியாற்றியுள்ளார்.

தள்ளிப்போன பிர்சா முண்டா

காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன், டான்சிங் ரோஸ் ஷபீர் ஆகியோர் நடித்துள்ளனர். கிஷோர்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் ’சார்பட்டா’ படத்திற்கு முன்பு பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றையே படமாக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப்போனது. சார்பட்டா படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பிற்கு பிறகு மீண்டும் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக காதல் படத்தை ரஞ்சித் எடுத்துள்ளார்.

Continues below advertisement