Natchathiram Nagargiradhu Premier Show: திரைபிரபலன்களின் பாராட்டை குவித்து வரும் "நட்சத்திரம் நகர்கிறது"... நேற்று வெளியான பிரீமியர் ஷோ



தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர் என அறியப்பட்ட பா.ரஞ்சித் இயக்கித்தில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் "நட்சத்திரம் நகர்கிறது". இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷார விஜயன், கலையரசன், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் தொடக்கம் முதல் இன்று வரை பெரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கும் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. 


 



 


பிரீமியர் காட்சி நேற்று திரையிடப்பட்டது:


படத்தின் வெளியீடு நாளை என்பதால் "நட்சத்திரம் நகர்கிறது" படத்தின் பிரீமியர் காட்சி நேற்று அதிகாலை சென்னை சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த பிரிமியர் காட்சியை பார்ப்பதற்காக பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஜெய் பீம் மணிகண்டன், கிருபாகரன் புருஷோத்தமன், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர்கள் ஆர்யா, ஜெயராம், ஹரிகிருஷ்ணன், இயக்குனர் சசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படத்தை ரசித்த அவர்கள் இப்படம் குறித்த தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களை ட்விட்டர் மூலமும் நேரடியாகவும் பதிவு செய்தனர். 


 






















 


சிறப்பான படம்:


படத்தின் திரைக்கதை, நடிகர்களின் தேர்வு, அவர்களின் நடிப்பு, கதைக்களம் என அனைத்துமே சிறப்பு என்பதே அனைவரின் விமர்சனமாக இருந்தது. படத்தை பற்றின அவர்களின் ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  பா.ரஞ்சித் இயக்கித்தில் வெளியான திரைப்படங்களில் இது ஒரு சிறந்த படமாக அமையும் என்பதில் என்தே சந்தேகமும் இல்லை.