Once Again Kalaidas Jayaraman - Dushara Vijayan : வித்தியாசமான திரைக்கதையில் மீண்டும் இணையும் "நட்சத்திரம் நகர்கிறது" ஜோடிகள்


திரை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே பாராட்டிய திரைப்படமான பா. ரஞ்சித்தின் "நட்சத்திரம் நகர்கிறது" ஆகஸ்ட் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஏராளமான விமர்சனங்களை சமூகவலைத்தளங்களில் வாரி குவித்தது என்றே சொல்ல வேண்டும். இளைஞர்களின் பேராதரவை பெற்ற இப்படத்தின் நடிகர்கள் குறித்த ஒரு  லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 


 



பாராட்டை குவிக்கும் நடிகர்கள்: 


"நட்சத்திரம் நகர்கிறது" திரைப்படத்தில் நடித்த காளிதாஸ் ஜெயராமன் மற்றும் துஷாரா விஜயன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கலையரசன் உள்ளிட்டோரின் சிறப்பான நடிப்பு அனைவரின் பாராட்டையும் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது. காளிதாஸ் ஜெயராமன் மற்றும் துஷாரா விஜயன் இருவரும் படம் முழுக்க திரையை ஆக்ரமித்தார்கள். இருவரும் மீண்டும் இயக்குனர் பாலாஜி மோகனின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பதை ஒரு பத்திரிகையின் நேர்காணலின் போது தெரிவித்து இருந்தார் நடிகர் காளிதாஸ் ஜெயராமன். ஆனால் படம் குறித்த வேறு எந்த தகவல்களையும் பகிரவில்லை. 


 






 


முன் அனுபவம் :


'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்திற்கு முன்னர் காளிதாஸ் ஜெயராமன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பிளாக் பஸ்டர் திரைப்படமான 'விக்ரம்' திரைப்படத்தில் கமலின் மகனாக நடித்திருந்தார். சில சீன்களில் மட்டுமே நடித்திருந்தாலும் சிறப்பாக நடித்திருந்தார் காளிதாஸ் ஜெயராமன் என்பது குறிப்பிடத்தக்கது. துஷாரா விஜயன் இப்படத்திற்கு முன்னர் ஆர்யா நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடித்திருந்தார். இயக்குனர் பா. ரஞ்சித்தின் இந்த புதுவிதமான திரைக்கதை மற்றும் காதல் மீது இருக்கும் தனித்துவமான அணுகுமுறை குறித்தும் LGBTQ சமூகத்தை பற்றியும் மிகவும் அழகாக படமாக்கியது அனைவரின் பாராட்டையும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 


 






 


தயாராகிறது புதிய ரொமாண்டிக் என்டர்டெய்ன்மெண்ட் திரைப்படம்:


'காதலில் சொதப்புவது எப்படி'  என்ற புதுவிதமான சூப்பர்ஹிட் திரைப்படத்தையும், நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' திரைப்படத்தை இயக்கிய பாலாஜி மோகனின் அடுத்த படத்தில் மீண்டும் இணைய உள்ளார்கள் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் ஜோடி. சூப்பர்ஹிட் திரைப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் மற்றுமொரு ரொமாண்டிக் என்டர்டெய்ன்மெண்ட் படத்திற்கு ரெடியாகிவிட்டார்.