தமிழ் சினிமாவில் ஒரு டான்சராக இருந்து பின்னர் நடன இயக்குநராக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர் தளபதி விஜய்க்கு வில்லனாக 'லியோ' படத்தில் தெறிக்கவிடும் நடிப்பால் அனைவரையும் வாய்பிளக்க வைத்தவர் சாண்டி மாஸ்டர். 


சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சாண்டி மாஸ்டர் லியோ படத்தில் நடித்த அனுபவம் குறித்த சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருந்தார்.  



இன்றைய டாக் ஆஃப் தி டவுனாக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் நடிக்க நேரடியாகவே என்னை அணுகினார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நான் நடிக்க தயார் என இருந்த சூழலில் மிகவும் முக்கியமான ஸ்ட்ராங் கதாபாத்திரமே தருகிறேன். நீங்க பண்ணுங்க சூப்பரா ஒர்க் அவுட்டாகும் என சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷம். அதிலும் விஜய் அண்ணா கூட நடிக்க நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். 


விஜய் அண்ணனுக்கு வில்லனாக நடிக்கும்போது கொஞ்சம் பயமாதான் இருந்துது. நானும் அவரும் கிளோஸ் சீன்ல நடிக்கும்போது அவர் ரொம்ப எமோஷனலா இருப்பாரு. முதலில் நான் சிரித்துவிட்டேன். அப்போ என்னை அவர் ஊக்குவித்தார். மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி சார் பண்ணதுபோல இப்படத்தில் விஜய் அண்ணா கூட கிளோஸ் சீன்ல நடிக்க எனக்கு லோகேஷ் சார் வாய்ப்பு கொடுத்து எல்லாம் ஒரு பெரிய கிஃப்ட்.


ஒரு ஜாலியான ஆளு இப்படியொரு சைக்கோ கேரக்டரில் நடிப்பதற்கு ஹோம் ஒர்க் பண்ணீங்களான்னு நிறைய பேர் கேட்டு இருக்காங்க. சிக்ஸ் பேக் பாடி பிரேம் கொண்டு வருவதற்கு நிறைய உடற்பயிற்சி செய்தாலும் அந்த கேரக்டருக்குள் என்னை பொருத்திக்கொள்ள கொஞ்ச நாட்கள் எடுத்து கொண்டது. கேரவேனில் இருந்தாலும் கூட லைட்களை எல்லாம் அணைத்துவிட்டு இருட்டில் அதே மூடில் இருக்க பழகிக்கொண்டேன். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அதே மூடில் டிராவல் செய்ய வேண்டும் என்பதற்காக ஷூட்டிங் முடியும் வரையில் நான் வீட்டுக்கே போகவில்லை. ஹோட்டல் ரூமில்தான் தங்கினேன். டெவில் சவுண்ட் ட்ராக், பேய் கத்துவது போன்ற ஆடியோ எல்லாம் பிளே பண்ணி அதே மூடில் இருக்க என்னை தயார் படுத்திக்கொண்டேன். 


 



என்னோட பேமிலி, ப்ரெண்ட்ஸ் என எல்லாருமே என்னோட இருந்தாலும் மணி என்ற ஒரு ப்ரெண்ட்டை நான் ரொம்ப மிஸ் பண்ணேன். அவர் இப்போ உயிரோட இல்லை. கலா மாஸ்டர் கிட்ட இருந்தபோது நாங்க இரண்டு பேரும் எப்பவுமே ஒரே மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு சுத்திகிட்டு இருப்போம். இப்போ அவர் இருந்தது இருந்தா அவரோட வளர்ச்சி வேற லெவலில் இருந்து இருக்கும். 


லியோ படத்திலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச சீன் என்றால் விஜய் அண்ணன் தன்னோட குடும்பத்தை நினைச்சு அழும் சீன் ஒன்னு இருக்கும். அதை அவர் நடிக்கும்போதே நேரடியாக பார்த்தேன், மானிட்டரில் பார்த்தேன் யப்பா... வேற லெவல் பர்ஃபார்மன்ஸ். 


  என்னோட காட்சிகள் எல்லாமே ரியாக்ஷன்தான் என்பதால் எல்லாமே பெரும்பாலும் முதல் டேக்கிலேயே ஒகே ஆகிவிடும். லோகேஷ் சார் எனக்கு ஏத்த மாதிரி தான் எல்லாமே செட் செய்து கொடுத்தார்.