Naresh Babu Marriage: 60 வயதான நடிகர் நரேஷ் பாபுவுக்கு 4வது மனைவியான 44 வயது நடிகை குறித்து, அந்த நடிகையின் முன்னாள் கணவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
60 வயதில் 4வது திருமணம் செய்து கொண்ட நரேஷ் பாபு
நடிகர் நரேஷ் பாபு தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களுள் ஒருவர். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சகோதரரும், மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மகனும் ஆவார். நரேஷ் பாபு தெலுங்கு திரையுலகில் தனக்கெனத் தனியிடத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இந்த நிலையில், 60 வயதில் நரேஷ் பாபு நான்காவது திருமணத்தை முடித்துள்ளார். மூன்று திருமண உறவும் தோல்வியில் முடிந்ததை அடுத்து, தனது 60 வயதில் நான்காவது திருமணம் செய்து கொண்டார். நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்து கொண்டார் நரேஷ்.
இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த வந்த நிலையில், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நரேஷின் நான்காவது மனைவியான பவித்ராவுக்கு 44 வயதாகிறது. இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். ஏற்கனேவ, நடிகை பவித்ரா திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
காரணம் என்ன?
இந்த திருமணம் குறித்து நடிகை பவித்ரா லோகேஷின் முதல் கணவர் சுரேந்திர பிராசத் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்புபவர். இதனால் தான் நரேஷ் பாபுவை திருமணம் செய்துள்ளார். அவர் காசுக்காக என்னவேண்டுமானாலும் செய்வார். நரேஷ் பாபுவிடம் ரூ.1,500 கோடி சொத்து இருப்பதால் அவருக்கு நான்காவது மனைவியாக பவித்ரா லோகேஷ் சம்மதம் தெரிவித்துள்ளார்" என்றார். இவரின் இந்த கருத்துகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
ஏற்கனவே நரேஷ் பாபுவுக்கு மூன்று திருமணங்கள் நடந்துள்ளது. மூத்த நடன அமைப்பாளர் ஸ்ரீனுவின் மகளை முதல் திருமணம் செய்த கொண்ட நிலையில், அவர்களுக்கு நவீன் விஜயகிருஷ்ணா என்ற மகன் உள்ளார். சில பிரச்சினைகள் காரணமாக இவரை விவாகரத்து செய்துவிட்டு, ரேகா சுப்ரியாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தேஜா என்ற மகன் உள்ள நிலையில், இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவரையும் விவாகரத்து செய்தார் நரேஷ் பாபு. தொடர்ந்து, தனது 50வது வயதில் நரேஷ் பாபுவை விட 20 வயது குறைவான ரம்யா ரகுபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஆனால், நரேஷ் பாபு இவரையும் விவாகரத்து செய்துவிட்டு, தனது 60 வயதில் நான்காவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Shruti Hassan: தெலுங்கு சினிமாவுக்கு வாழ்க்கை முழுதும் நன்றியுடன் இருப்பேன்.. ஷ்ருதி ஹாசன் உருக்கம்!