நடிகர் நானி வெப்பம் படத்தில் தமிழில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சமந்தாவுடன் இணைந்து நானி, வாணி கபூருடன் இணைந்து ஆஹா கல்யாணம் போன்ற படங்களிலும் இவரை தமிழில் பார்க்க முடிந்தது. இந்தப் படங்களின்மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்கள் இவருக்கு கிடைத்தனர். இவரது அழகான அடுத்த வீட்டு பையன் லுக், இவருக்கு தமிழில் அதிக ரசிகர்களை பெற்றுத் தந்தது.இதையடுத்து தொடர்ந்து தமிழில் அதிகமான படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு இல்லாமல் தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் நானி. 


வடக்கு தெற்கு விவாதம்


நாட்டில் நடந்து வரும் மொழி விவாதம் குறித்து நேச்சுரல் ஸ்டார் நானி மனம் திறந்து பேசியுள்ளார். வடக்கு மற்றும் தெற்கு விவாதம் சில வாரங்களாக இந்தியத் திரையுலகில் பரபரப்பான விவாதப் பொருளாக உள்ளது. RRR மற்றும் KGF 2 போன்ற படங்கள் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாகச் செயல்பட்ட பிறகு இந்த விவாதம் வளரத் தொடங்கியது, அதே நேரத்தில் பல பாலிவுட் படங்கள் டிக்கெட்டுகள் விற்காமல் தடுமாறுகின்றன. நடிகர் நானியும் இந்த விவாதத்தில் அவரது கருத்தை முன்வைத்தார், அவர் வடக்கு தெற்கு என்று பிளவுபடுவதை 'முட்டாள்தனம்' என்று கூறியுள்ளார்.



தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


பிரிவினைகள் முட்டாள்தனம்


பிரிவினைகள் குறித்து பேசிய நானி, "இந்த பிரிவினை முட்டாள்தனமானது. என்ன நடந்தாலும் சினிமாக்கள் வெற்றி பெறுகின்றன. பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என ஹாலிவுட்டிலிருந்து கடன் வாங்கிய பெயர்களை வைத்து நமக்குள் சண்டையிடுவது நியாயமல்ல. நாம் ஏன் நம்மை வெவ்வேறு தொழில்களாக பார்க்கிறோம் என்று எனக்குப் புரியவில்லை. மொழிகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் நாம் ஒரே நாடு." என்று கூறினார்.


பான் இந்திய திரைப்படங்கள்


பான் இந்திய திரைப்படங்கள் என்றால் என்ன என்று விளக்கி பேசுகையில், "ஒரு படம் பரபரப்பாக இந்தியா முழுவதும் பேசு பொருளை உருவாக்கும் போது, ​​அது ஒரு இந்தியப் படம். எல்லா இடங்களிலும் வெளியிடுகிறோம் என்பதற்காக ஒரு படம் பான் இந்தியா படமாகி விடாது. எல்லா இடங்களிலும் பார்வையாளர்களால் விரும்பப்படும் ஒரு படம் தான் உண்மையான பான்-இந்தியா திரைப்படம். நாடு முழுவதும் உள்ள மக்கள் விரும்பும் வகையில் ஒரு சிறந்த திரைப்படத்தை தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு பிரிவினையை உருவாக்க கூடாது. " என்று கூறியுள்ளார்.



அடடே சுந்தரா


தற்போது நஸ்ரியாவுடன் இணைந்து விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் அன்டே சுந்தரானிகி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் தற்போது அடடே சுந்தரா என்ற பெயரில் தமிழில் வெளியாகிவுள்ளது. முன்னதாக படத்தின் ட்ரெயிலர், பாடல்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக நானி நடிப்பில் ஷாம் சிங்கா ராய் என்ற படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் அவருக்கு சாய் பல்லவி மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் ஜோடியாகியிருந்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகவுள்ள அடடே சுந்தரா படம் காதல் கலந்த காமெடி படமாக வெளியாகி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.