ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் மற்றும் பழம்பெரும் நடிகரான என்.டி.ராமராவின் ஆறாவது மகன் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இன்று இவர் தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளான இன்று அவரை பற்றிய சில ஸ்வாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்:



  • 1974ல் அவரது தந்தை இயக்கத்தில் வெளியான 'தத்தம்மா காலா' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பாலகிருஷ்ணா. 


 



தந்தை என்.டி.ராமராவ் - மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா


 



  • திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களால் அவர் செல்லமாக என்.பி.கே என அழைக்கப்படுகிறார்.

  • 2014ல் ஹிந்துபுரத்தில் நடைபெற்ற எம்எல்ஏ தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் அதே தொகுதியில் 2019ல் வெற்றி பெற்றார்.

  • தெலுங்குத் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆந்திரப் பிரதேச அரசு வழங்கும் நந்தி விருதை மூன்று முறை பெற்றுள்ளார் நடிகர் பாலகிருஷ்ணா. நரசிம்ம நாயுடு படத்திற்காக 2001ல், சிம்ஹா படத்திற்காக 2010ல் மற்றும் லெஜண்ட் படத்திற்காக 2014ம் ஆண்டும் சிறந்த நடிகருக்கான நந்தி விருது வழங்கப்பட்டுள்ளது.

  • நடிகர் பாலகிருஷ்ணா 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனது ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். சமீபத்தில் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் வெளியானது.

  • பசவதாரகம் இந்தோ அமெரிக்கன் கேன்சர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஐதராபாத்தில் இயங்கி வருகிறது. அந்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கூடத்தில் உள்ள பல நோயாளிகளுக்கு இலவச சிகிச்சைகளை மேற்கொள்ள நடிகர் பாலகிருஷ்ணா உதவி செய்து வருகிறார்.


 




  • சமீபத்தில் தனது தந்தை என்.டி.ராமராவின் நூறாவது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக விஜயவாடாவில் கொண்டாடினார். இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவி மற்றும் பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

  • தற்போது அனில் ரவிபுடி இயக்கத்தில் தனது 108வது படத்தில் நடித்து வருகிறார். 'பகவந்த் கேசரி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகியுள்ளது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.