நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் தனது முன்னாள் மருமகளாக சமந்தா குறித்து நடிகர் நாகார்ஜூனா நலம் விசாரித்த வீடியோ வைரலாகி வருகிறது. 


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை போல், தெலுங்கில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜூனா தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் 7 சீசனின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 14 போட்டியாளர்களுடன் நடைபெறும் பிக்பாஸ் 7 சீசனின் புரோமோஷனை நாகார்ஜூனா தொகுத்து வழங்கினார். அப்போது விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா பங்கேற்றிருந்தார். 


அண்மையில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூலில் எதிர்பார்த்த வெற்றியை குஷி படம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்து வருகிறது. சிவா நிர்வானா இயக்கி இருக்கும் இந்த படம் மணிரத்னத்தின் அலைபாயுதே, பம்பாய் படங்களின் சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. எனினும் காதல் திருமணமும், அதன் பின்னர் ஏற்படும் பிரச்சனைகளையும் கொண்ட குஷி படத்தை இளைஞர்கள் ரசித்து வருகின்றனர். 


முன்னதாக படதின் ரிலீசையொட்டி படக்குழுவும், விஜய் தேவரகொண்டாவும் ஏகப்பட்ட புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். இதற்கிடையே படத்தை முடித்த கையோடு ஆன்மீகம், சுற்றுலா என பிசியாக இருந்த சமந்தா, தனது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் தெலுங்கில் நடைபெற உள்ள பிக்பாஸ் 7 சீசனில் சிறப்பு விருந்தினராக வந்த விஜய் தேவரகொண்டாவை நாகார்ஜூனா வரவேற்று பேசினார். அப்பொழுது குஷி படத்தின் ஹீரோயினான சமந்தா எங்கே என கேட்ட நாகார்ஜூனா, விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் நல்ல நடிகர்கள் என புகழ்ந்து பேசியுள்ளார்.






நாகார்ஜூனாவின் விசாரிப்புக்கு பதிலளித்த விஜய்தேவரகொண்டா, குஷி படத்தின் புரோமோஷனுக்காகவும், சிகிச்சைக்காவும் சமந்தா அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நாகார்ஜூனா குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் போட்டி போட்டு கொண்டு நடித்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார். 


நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா கடந்த 2021ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். தொடர்ந்து 2 ஆண்டுகளாக மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வரும் சமந்தா, சிகிச்சையும் எடுத்து வருகிறார். இந்த நிலையில் சமந்தாவை நாகார்ஜூனா விசாரித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க: Mark Antony Trailer: 17 மணி நேரத்தில் ஒரு கோடி வியூஸ்... விஷால், எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ ட்ரெய்லர் சாதனை!


Vetrimaaran: 'மூச்சுவிடும் நேரத்துக்குள் பகைவரால் அழிக்கப்படுவர்' - திருக்குறள் பகிர்ந்து வெற்றிமாறனை வாழ்த்திய விடுதலை படக்குழு