Just In





Naga Chaitanya : “சமந்தாவை பார்த்தால் கட்டிப்பிடிப்பேன்” - சமந்தாவுக்கு நாக சைதன்யா பதிலடி!
சமீபத்தில் ஒரு பேட்டியில் , சமந்தாவைப் பார்த்தால் என்ன செய்வேன் என்று நாக சைதன்யா தெரிவித்திள்ளார்.

நாகர்ஜூனா அமலா தம்பதியின் மகனான நாக சைதன்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை சமந்தாவை கரம் பிடித்தார். க்யூட் கப்பிள்ஸாகவே இருவரும் வலம் வந்தனர். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, இவர்கள் திருமணம் 4 ஆண்டுகளிலேயே முறிந்தது.
சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தத்தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர். இருவரின் பதிவிலும் சமந்தா, சைதன்யா என்ற வார்த்தை மட்டுமே மாறி இருந்தது. மற்றபடி ஒரே தகவலையே அவர்கள் பதிவிட்டு உள்ளனர். குறிப்பாக தங்கள் நீண்ட நாள் நட்பு தொடரும் என்றும், இந்த கடினமான காலத்தில் தங்களின் தனிப்பட்ட ரகசியம் மற்றும் சுய உரிமைக்கு மதிப்பளிக்குமாறும் ரசிகர்களிடம் இருவரும் கேட்டுக்கொண்டனர்.
இது டோலிவுட், கோலிவுட் என இரண்டு சினிமா உலகிலுமே சென்சேஷனல் பேச்சானது.
இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் பல சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்தார். தனக்கும் நாக சைதன்யாவுக்குமான உறவு இப்போது எப்படி இருக்கிறது எனக் கேட்டக் கேள்விக்கு, ’என்னையும், அவரையும் ஒரே ரூமில் அடைத்தால் அந்த ரூமில் கூர்மையான ஆயுதங்களை மறைத்து வைக்க வேண்டுமா என நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்? ஆம் இப்போதைக்கு அது உண்மைதான்’, என்று பதில் அளித்தார் நடிகை சமந்தா.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நாக சைதன்யாவிடம் இதைப் பற்றி கேட்கப்போது, “நான் ஹாய் சொல்லி அவளை கட்டிப்பிடிப்பேன்" என்றார் . பின்னர் அவரிடம் விவாகரத்துக்குப் பிந்தைய வாழ்க்கை பற்றி கேட்கப்பட்டப்போது ’விவாகரத்துக்குப் பின்னர் எனது வாழ்க்கை நிறையவே மாறியுள்ளது. நான் இப்போதெல்லாம் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிகம் செலவழிக்கிறேன். முன்னர் என்னால் நிறைய மனம் திறந்து பேச முடியாது. இப்போது நான் ஒரு புதிய மனிதனாக இருக்கிறேன்’ என்றார் சைதன்யா.
நாக சைதன்யா, அமீர் கானுடன் இணைந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’லால் சிங் சத்தா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிவுள்ளார். அமீர் கானின் ராணுவ நண்பரான பாலராஜுவாக சைதன்யா நடித்துள்ளார்.