சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகியோர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். நீண்ட ஆலோசனைக்கு பிறகு,  எங்கள் சொந்த பாதையை தொடர நானும், சைதன்யாவும் பிரிகிறோம் என சமந்தா குறிப்பிட்டுள்ளார். மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேலான நட்பைப் பெற்றிருந்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம், அது எங்கள் உறவின் முக்கிய அம்சமாக இருந்தது.எப்போதும் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பு பிணைப்பை வைத்திருக்கும் என நம்புகிறோம்.


மேலும் எங்களது ரசிகர்கள், நலம் விரும்பிகள்,  ஊடகங்கள ஆகியோர் இந்த கடினமான காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதை கடந்து செல்வதற்கான பிரைவசியை அனைவரும் வழங்க வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.





தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து மணந்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் சமந்தா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 தொடர் முதலில் பல எதிர்ப்புகளைச் சந்தித்து, வெப்சீரிஸ் சரியான பிறகு பலத்த வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து தெலுங்கு ஊடகங்கள் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இப்பட விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு , பிரிந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய விருக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.


நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் இணைந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்றபோது அவரிடம் விவாகரத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது அதற்கு அவர்,  "கோவிலுக்கு வந்து இதை  கேட்கிறீர்களே.... புத்தி இருக்கா" என மிகவும் கோபத்துடன் கேட்டதும் விவாகரத்து ஆகப்போகிறதென்ற செய்திகளுக்கு வலு சேர்த்தன. என்னதான் ஊடகங்கள் செய்தி பரப்பினாலும்   சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனம் காத்து வந்தனர்.


இந்நிலையில் சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகியோர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.  எங்களது ரசிகர்கள், நலம் விரும்பிகள்,  ஊடகங்கள ஆகியோர் இந்த கடினமான காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதை கடந்து செல்வதற்க பிரைவசியை அனைவரும் வழங்க வேண்டும் என இருவரும் ஒரே பதிவை இட்டுள்ளனர்.