ரூ.100 கோடி வசூலை அள்ளிய நாக சைதன்யாவின் தண்டேல் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த தண்டேல் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continues below advertisement

தெலுங்கு திரையுலக முன்னணி இளம் நடிகரான நாக சைதன்யா,  2ஆவது திருமணத்திற்கு பிறகு வெளியான முதல் படம் தண்டேல். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். மீனவர்களைப் பற்றிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம், கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி நாக சைதன்யாவின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

Continues below advertisement

 இது எல்லாவற்றிற்கும் காரணம் சோபிதா துலிபாலா வந்த நேரம் என்று நாகர்ஜூனா புகழ்ந்து தள்ளி இருந்தார். கடந்த மாதம் 7-ஆம் தேதி ரிலீஸ் ஆகி நாகசைதன்யாவுக்கு முதல் 100 கோடி வசூலை வாரி கொடுத்த இந்த படம், ஆன்லைனில் வெளியானது தான் இந்த படம் அதிகமான வசூலை பெற தவறியதன் காரணம் என கூறப்பட்டது.

 இந்த நிலையில் தான் தற்போது, இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி வரும் 7ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் தண்டேல் படத்தை பார்த்து ரசிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola