ஸ்ருதி சண்முகப்பரியா சின்னத்திரையில் நாதஸ்வரம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையுலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் பொன்மஞ்சள், கல்யாணப்பரிசு, வாணி ராணி போன்ற பல்வேறு சீரியல் நடித்து  ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். அவருக்கென்று தனி ரசிகர்களும் உண்டு.


சின்னத்திரையில் பிரபலமடைந்த ஸ்ருதி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தனுஷ், த்ரிஷா நடித்த கொடி என்ற திரைப்படத்தில் ஸ்ருதி நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்பொழுது அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்துவருகிறார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். இதற்கிடையே அவர் அரவிந்த் என்பவரை காதலித்து வந்தார்.


இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரவிந்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து திருமண அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இவ்வளவு அன்பையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்த உங்கள் அனைவருக்கும் எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றிகள்! இது பூச்சாடல் விழா. நிச்சயதார்த்தம் மற்றும் திருமண அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவோம்.






 






உங்கள் அனைவரின் அன்பும் ஆசியும் வேண்டும்” என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்களும், சின்ன திரையுலகினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Michaelpatti Village Petition | மதம் மாறச்சொன்னதாக கூறச்சொல்லி நிர்பந்திக்கின்றனர் - மைக்கேல்பட்டி கிராம மக்கள்