Amazon Prime ஓடிடி தளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய திரைப்படம் ‘ஜெய் பீம்.  சமூக வலைத்தளங்களில் ‘டாக் ஆஃப் தி டவுனாக’ மாறிய ஜெய்பீம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் அரசியல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. 

Continues below advertisement




படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை பார்த்து தூக்கம் வரவில்லை என பாராட்டினார். ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம் பிடித்த, ஜெய்பீம் அண்மையில் நொய்டாவில் நடந்த சர்வதேச பட விழாவிலும் விருதுகளை அள்ளியது. இதற்கடுத்தபடியாக, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர சன்பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. 




இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, பிரியங்கா மோகன் நடித்துள்ளார். பிரியங்கா மோகன் கதாபாத்திரம் குறித்து பேசிய இயக்குநர் பாண்டியராஜ், ப்ரியங்கா ஆதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், சூர்யாவுக்கும், அவருக்குமிடையேயான காதல் காட்சிகள் மிகவும் எதார்த்தமாக இருக்கும் என்று பேசியுள்ளார்.


பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ள இந்தத் திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவாவுடனும், சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கராவுடனும் இணைய இருப்பதாக கூறியுள்ளார். இயக்குநரின் பாலாவுடனான படம் மற்றும் வெற்றிமாறனின் வாடி வாசல் படங்களை முடித்துவிட்டு இந்தப்படங்களுக்கான வேலைகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.