Valimai | புது ஸ்டில்லு.. புது டைம்..  ‘நாங்க வேற மாறி’ அப்டேட் கொடுத்த வலிமை படக்குழு!

இன்று வெளியாக இருக்கும் பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்தப் பாடலை யுவன்ஷங்கர் ராஜா பாடியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

‘வலிமை’ படத்தின் முதல் பாடல்  ‘நாங்க வேற மாறி’ பாடலின் லிரிக் வீடியோ  இன்று இரவு 10.45 மணிக்கு உள்ளதாக கூறி, அஜித் கை கட்டி நிற்பது போன்ற ஸ்டில் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதன்மூலம், இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டது. இப்போது, வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று இரவு வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.

 

இந்த நிலையில்,  ‘வலிமை’ படத்தின் முதல் பாடல்  ‘நாங்க வேற மாறி’ பாடலின் லிரிக் வீடியோ  இன்று இரவு 10.45 மணியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் அஜித் கை கட்டி நிற்பது போன்ற ஸ்டில் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

 

அஜித்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் தீனா தொடங்கி பல வெற்றி படங்கள் அமைந்துள்ளன. எனவே இந்தப் படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுவும் ஹிட் அடிக்கும் என்று அஜித் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 

இன்று வெளியாக இருக்கும் பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்தப் பாடலை யுவன்ஷங்கர் ராஜா பாடியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிங்கிளை எதிர்பார்த்து நெட்டிசன்கள் #ValimaiFirstSingle ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வலிமை திரைப்படத்தில் அஜித்துடன், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். வலிமை படத்தை பொருத்தவரை, ஆகஸ்ட் இறுதிக்குள் திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், படத்தில் எஞ்சியுள்ள சில காட்சிகளை விரைந்து முடித்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை பொருத்து, படத்தின் வெளியீடு தேதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.        

Valimai First Single Release: வருகிறதா ‛வலிமை’ பாடல்....? சோனி மியூசிக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

 

Continues below advertisement