செல்வராகவன் , தனுஷ் காம்போவில் ஒரு திரைப்படம் என்றால் சொல்லவா வேண்டும். அப்படி மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம்தான் நானே வருவேன் . இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். தனுஷ் ஹீரோவாக நடிக்க செல்வராகவன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது. நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதமே தொடங்கப்படும் என இயக்குநர் செல்வராகவன் அறிவித்திருந்தார். ஆனால் திடீரென பீஸ்ட் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு வரவே , அதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு தனது நானே வருவேன் திரைப்படத்தி ஷூட்டிங் தேதியை தள்ளி வைத்துவிட்டார். பின்னர் ரசிகர்கள் தொடர்ந்து நானே வருவேன் திரைப்படத்தின் அப்டேட் கேட்கவே , படம் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 






 


அறிவித்தபடி கடந்த வாரம் நானே வருவேன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கியது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் தானு “இடைவிடாத படப்பிடிப்பு இனிதே ஆரம்பம் “ என குறிப்பிட்டிருந்தார். அதே போல படத்தை குறிப்பிட்ட தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என செல்வராகவன் , படக்குழுவிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறாராம். முன்னதாக தனுஷ் கௌபாய் போன்ற தோற்றத்திலிருந்த ஃபஸ்ட்லுக் புகைப்படம் வெளியானது. தற்போது தனுஷ் கெத்தாக ஜீப் ஓட்டி செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை பகிர்ந்த கலைப்புலி எஸ் தானு “ உங்கள் நாளை சிறப்பானதாக மாற்ற எங்கள் தரப்பிலிருந்து ஒரு சர்ப்ரைஸ் ” என குறிப்பிட்டு  புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தனுஷ் முறைத்து பார்ப்பது போன்ற முக பாவனையோடு ஜீப் ஒட்டி செல்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது மேலும் #Dhanush   #NaaneVaruven  போன்ற முன்னெடுப்புகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.







. காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற தனுஷ் செல்வராகவன்  கூட்டணி திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. அண்ணன் தம்பி காம்போவிற்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம் . அந்த வகையில் தற்போது  உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படமும் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நானே வருவேன் திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என தயாரிப்பாளர் தானு கேட்டுக்கொண்டதாகவும், அதன்படி படம் ‘ராயன்’ என்ற பெயரில் வெளியாகும் என்ற செய்திகள் வெளியான நிலையில் , பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.