Naane Varuven Twitter Review: மக்களின் ஃபேவரைட் தனுஷ் - செல்வா கூட்டணி ஒர்க் அவுட் ஆச்சா? நானே வருவேன் ட்விட்டர் விமர்சனம் இதோ!
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 5ஆவது முறையாக தனுஷ் - செல்வராகவன் கூட்டணி இணைந்துள்ள நிலையில், ’நானே வருவேன்’(Naane Varuven) படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படத்தின் ட்விட்டர் விமர்சனங்களை (Twitter Review) பார்க்கலாம்!

’துள்ளுவதோ இளமை’, ’காதல் கொண்டேன்’, ’புதுப்பேட்டை’, ’மயக்கம் என்ன’ ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ்(Dhanush) கூட்டணி 5ஆவது முறையாக இணைந்துள்ள படம் ’நானே வருவேன்’.
கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ள நிலையில், படப்பிடிப்பு தொடங்கியது முதல் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறியிருந்தது. கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்துள்ளார். இன்று காலை வெளியான இத்திரைப்படம் குறித்து, படம் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதோ அந்த கருத்துக்கள்..
Just In




முன்னதாக வெளிநாட்டு தணிக்கை வாரிய உறுப்பினரும் திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து நானே வருவேன் திரைப்படத்தைப் பார்த்து விட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ”நானே வருவேன் படத்தின் சென்சார் திரையிடல் முடிந்தது. இந்த படத்தில் தனுஷின் நடிப்பைப் பற்றி பேச வார்த்தையேயில்லை ! 2022 அவருக்கு சொந்தமானது” என ட்விட்டரில் முதல் ரிவ்யூ பகிர்ந்தார்.