Naane Varuven Teaser update : "நானே வருவேன்" டீசர் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியானது 


இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் "நானே வருவேன்" படத்தின் டீசர் வெளியீது குறித்த அதிகாரபூர்வமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 11ம் தேதி SIIMA எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் வெளியிடப்படவுள்ளது என்ற தகவலை தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.


 




 
நான்காவது முறையாக செல்வா - தனுஷ் கூட்டணி :


வி க்ரியேஷன் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "நானே வருவேன்". நடிகர் தனுஷ் நான்காவது முறையாக இயக்குனர் செல்வராகனோடு இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் தற்போது மிகுந்த ஆவலுடன் "நானே வருவேன்" படத்தின் டீசர் வெளியீட்டை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.  


 






 


இரட்டை வேடத்தில் தனுஷ் :


"நானே வருவேன்" திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ள தனுஷ் ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார் மேலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. இப்படம் செப்டம்பர் 11 டீசர் வெளியீட்டை தொடர்ந்து செப்டம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. "நானே வருவேன்" படத்தின் வீர சூரா பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 


 






 


கலைஞர்களை கௌரவிக்கும் SIIMA விருதுகள் :


தென்னிந்திய திரைப்படங்கள், தொழிநுட்ப கலைஞர்கள் மற்றும் சினிமா சார்ந்தவர்களை கௌரவிக்கும் விதமாக இந்த விருதுகள் 2012ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. திரைத்துறையில் இது ஒரு முக்கியமான விருதாக கருதப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்த விளங்கிய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், திரைக்கதை என பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அப்படி இந்த ஆண்டிற்கான SIIMA விருதுகள் பெங்களூரில் நடைபெறும் என்றும் பத்தாவது ஆண்டு என்பதால் மிகவும் கோலாகலமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் எனவும்  கூறப்படுகிறது.