பொதுவாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் நாளைடைவில் ஹீரோவுக்கு ஜோடியாகவே நடிப்பார்கள். அப்படியான நிகழ்வுகள் தமிழ் சினிமாவில் ஏற்கனவே அதிகம் நடந்திருக்கிறது. ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் அவருக்கு நடிகை மீனா ஜோடியாக நடித்தார்.
இதே போன்று தான் நடிகர் கார்த்தி நடிப்பில் வந்த 'நான் மகான் அல்ல' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலம் தான் இன்று அவரது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் தான் நான் மகான் அல்ல. இந்தப் படத்தில் கார்த்தி உடன் இணைந்து காஜல் அகர்வால், சூரி, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி, விஜய் சேதுபதி, சிங்கம்புலி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் ஒரு காட்சியில் கீர்த்தி ஷெட்டி குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடிக்கும் பொது கீர்த்தி ஷெட்டிக்கு 6 வயது தான் ஆனது. பின்னர் 18 வயதில் உப்பென்னா படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். தி வாரியர் மற்றும் கஸ்டடி ஆகிய 2 பைலிங்குவல் படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்தார். இந்த நிலையில் தான் இப்போது நேரடியாக தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் வா வாத்தியார் என்ற படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். 21 வயதாகும் கீர்த்தி ஷெட்டி 47 வயதாகும் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருப்பது அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்க செய்துள்ளது. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், வடிவுக்கரசி, ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலமாக ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.