மிஸ்கின்


தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். இவரது முதல் படமான சித்திரம் பேசுதடி படம் கமர்ஷியல் சினிமா ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக அமைந்தது. வித்தியாசமான குணங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள். காட்சி அமைப்பில் புதுமை என கொஞ்சம் கொஞ்சமாக தனது படங்களுக்கு பழக்க படுத்தியவர் மிஸ்கின். தொடர்ந்து மிஸ்கின் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றி பெற்றது. மிஸ்கின் படங்கள் என்றால் கொஞ்சம் வித்தியாசமான கதைகளை எதிர்பார்க்கலாம் என்கிற எண்ணம் ரசிகர்கள் மனதில் உருவானது. அடுத்தபடியாக வெளியான யுத்தம் செய் படமும் பெரிய வெற்றி பெற்றது.


முகமூடி


அடுத்தடுத்த படங்களின் வெற்றி  மிகினின் கரியரில் மிகப்பெரிய படமாக முகமூடி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஜீவா , பூஜா ஜெக்டே , நரேன் , நாசர் , கிரீத் கர்னா  உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். கே.கே இசையமைத்திருந்தார்.  மிஸ்கினின் லோன் வுல்ஃப் ப்ரோடக்‌ஷன்ஸ் மற்றும் யூடிவி மோஷன் பிக்ச்சர்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்தது. ஹாலிவுட்டில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வெளியான பேட்மேன் பட சாயலில் உருவான முகமூடி படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முகமூடி படம் தோல்வி அடைந்தது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்சயன் பேசியுள்ளார். 


மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ் தான் 


அவர் பேசுகையில் “ முகமூடி படத்திற்கு முன்பு வெளியான மிஸ்கினின் யுத்தம் செய் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் மிஸ்கின் நம்ம எடுப்பது தான் படம் என்கிற அளவுக்கு ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆகிட்டார். முதலில் இந்தப் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தார். ஒரு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சூர்யா இந்த படத்தில் நடிக்கவில்லை. பின் ஜீவா ஒப்பந்தம் ஆனார். படத்தின் கிளைமேக்ஸ் எடுத்துக் கொண்டு இருந்தபோது ஜீவா எனக்கு கால் செய்து எனக்கு இந்தப் படமே பிடிக்கவில்லை சார். இந்த கிளைமேக்ஸ் வர்க் அவுட் ஆகாது என்று சொன்னார் . நான் மிஸ்கினிடம் நாம் கொடுத்த எதிர்பார்ப்பிற்கு இப்படியான ஒரு கிளைமேக்ஸ் வைத்தால் நிச்சயமாக மாட்டிப்போம். ரசிகர்களுக்கு பிடிக்கும்படியாக பிரம்மாண்டமாக ஒரு கிளைமேக்ஸ் வைக்கலாம் என்று அவரிடம் சொன்னேன். மிஸ்கின் உடனே நான் படம் எடுத்துவிட்டேன். இதுதான் படம். நான் எடுத்திருக்கேன். நீங்க ரிலீஸ் பண்ணுங்க என்று சொன்னார். நான் 18 கோடி இந்தப் படத்தில் முதலீடு செய்திருந்தேன். ஜீவாவின் கரியரில் இதுதான் பெரிய பட்ஜெட் படம். எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள்” என்று தனஞ்சயன் பேசியுள்ளார்.