Dragon: பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் இணைந்த மிஸ்கின்: வேற என்ன அப்டேட்?

பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் டிராகன் படத்தில் மிஸ்கின் , விஜே சித்து உள்ளிட்ட பலர் படக்குழுவில் இணைந்துள்ளார்கள்

Continues below advertisement

பிரதீப் ரங்கநாதன்

கோமாளி , லவ் டுடே என அடுத்தடுத்த இரு மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.சி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புடன் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் மற்றொரு படம் டிராகன். ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது . கடந்த மாதம் இப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது.

Continues below advertisement

டிராகன் படத்தின் படக்குழுவினர்

சுவாரஸ்யமான கல்லூரி கதையாக உருவாகும் டிராகன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஜூன் மாதம் இறுதியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் ஹைதராபாத் மற்றும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டிராகன் படத்தில் இயக்குநர் மிஸ்கின் , கே.எஸ் ரவிகுமார் மற்றும் ஹர்ஷத் கான், விஜே சித்து உள்ளிட்டவர்கள் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் நாயகியாக பிரபல மலையாள நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் படத்தில் மமிதா பைஜூ

 எல்.ஐ சி மற்றும் டிராகன் படம் தவிர்த்து பிரதீப் ரங்கநாதன் சுதா கொங்காராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்திஸ்வரன் இயக்கும் முதல் படத்தில்   நாயகனாக நடிக்க  இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி பிரேமலு படத்தின் மூலம் தென் இந்திய திரைப்பட ரசிகர்களின் மனதை கவர்ந்த மமிதா பைஜூ இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. 


மேலும் படிக்க : Vadakkan Movie: டைட்டிலுக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு.. வடக்கன் படத்தின் பெயரை மாற்றிய படக்குழு!

Raveena Tandon: பெண்கள் மீது மோதிய கார்! சுற்றி வளைத்த பொதுமக்கள்! கேஜிஎஃப் நடிகைக்கு செம அடி!

Continues below advertisement
Sponsored Links by Taboola