தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள வெற்றி மாறன் தனது இரண்டாவது படத்தில் தேசிய விருது வாங்கினார். 2011இல் வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் 6 விருதுகளை வாங்கி குவித்தது. இந்த விருது அறிவித்த நாள் எப்படி இருந்தது என்று வெற்றிமாறனின் தாய் மேகலா சித்ரவேல் ஒரு பேட்டியில் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். மேகலா சித்ரவேல் ஒரு எழுத்தாளர் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். அவரது குடும்பம், மகள், மகன் குறித்து பேசிய அவர், தேசிய விருது அறிவிப்பு நாளில் நடந்தவற்றை குறித்து பேசினார். 



தனுஷுக்கு கிடைக்கலன்னு வருத்தப்பட்டேன்


அவர் பேசுகையில், "என் கணவர் கிட்ட அடிக்கடி சொல்லிகிட்டே இருப்பேன், ஒரு நாள் தேசிய விருது ப்ரெசிடன்ட் கையாள வாங்குவான் அப்டின்னு. அவரு கேட்கவே மாட்டாரு, வெற்றிமாறன்கிட்ட சொன்னா அவனும் உனக்கு ரொம்பதான் மம்மி பேராசைன்னு கிண்டல் பண்ணுவான். அன்னைக்கு நான் கடைக்கு போய்ட்டு வந்தேன், ஏதோ தேசிய அரசியல்ல முக்கியமான விஷயம் நான் என்டிடிவி வச்சு பாத்துட்டு இருந்தேன். அப்போதான் திடீர்ன்னு ஃபிளாஷ் ஆகுது நேஷனல் அவார்டு அறிவிப்புன்னு. முதல்ல பெஸ்ட் ஆக்டர் வருது, அப்போ சலீம் குமாருக்கு கொடுக்குறாங்க, ஆதாமிண்டே மகன் அபு படத்துக்காக. நான் ரொம்ப வருத்தப்பட்டேன், தனுஷுக்கு கிடைக்கலயேன்னு", என்றார்.


தொடர்புடைய செய்திகள்: Womens T20 worldcup: உலகக்கோப்பை ஃபைனல்: தென்னாப்ரிக்காவை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை வெல்லுமா ஆஸ்திரேலியா?


தேசிய விருது அறிவிப்பு


மேலும், "அப்புறம் அடுத்தது தனுஷ் ஆடுகளம்ன்ன்னு சொல்றாங்க. எனக்கு சந்தோஷம் தாங்கல, அப்புறம் கடைசியா வெற்றி'மறன்' அப்டின்னு படிச்சாரு, செக்ரட்டரி. அப்புறம் கீழ இருந்து பத்திரிக்கையாளர்கள் எல்லாம் கத்துறாங்க, வெற்றி'மாறன்'ன்னு. ஓகே ஓகே ன்னு சொல்லிட்டு ஆடுகளம்ன்னு சொல்றாரு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல, ஐயோ ஐயோ ன்னு கத்துறேன். என் மகளுக்கு போன் பண்ணி சொன்னேன், ஸ்டேட் அவார்டுதானே தெரியும்ன்னு சொன்னா. இல்ல நேஷனல் அவார்டு டிவில பாருன்னு சொன்னேன். அப்புறம் மருமகளுக்கு போன் பண்ணேன்", என்று கூறினார். 



தலையில் விழுந்த கண்ணீர்


இருவரும் சந்தித்தது குறித்து, "வெற்றிமாறனுக்கு நானும் கால் பன்றேன், அவனும் எனக்கு கால் பண்றான், ரொம்ப நேரம் நாங்க பேசிக்கவே இல்ல. அப்புறம் ரொம்ப நேரம் கழிச்சு அவன் கால் பண்ணான், அவன் மம்மி மம்மின்னு சொல்றான், எனக்கும் வார்த்தை வரல, சரி நீ வீட்டுக்கு வா பேசிக்குவோம்ன்னு சொன்னேன். நைட்டு 12 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தான், சுத்தி ஒரே கூட்டம். என் கண்ணு கலங்கிடுச்சு, வந்து என் கால்ல விழுந்தான், என் கண்ணீர் அவன் தலைல விழுந்துச்சு. அது மறக்கமுடியாத நாள்", என்று உணர்ச்சி பொங்க கூறினார்.