'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு பதிப்பான ஏ மாயா சேசாவே தொடங்கி இத்தனை ஆண்டுகளாக அவருக்கு குரல் கொடுத்த வந்தவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி. இருவரும் உற்ற தோழிகளாகவும் வலம் வரும் நிலையில், முன்னதாக சமந்தாவுடனான தன் அழகிய பயணத்தை முடித்துக் கொள்வதாக சின்மயி தெரிவித்துள்ளது இருவரின்  ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


டோலிவுட்டில் டப்பிங் கலைஞராக எனது பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்போது சமந்தா ரூத் பிரபு தனது கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேசி வருகிறார். என்னுடைய சிறந்த தோழியான சமந்தாவுக்கு டப்பிங் பேச எனக்கு இனி வாய்ப்பு கிடைக்காது” என்று தெரிவித்துள்ளதார்.


 






கௌதம் மேனன் இயக்கிய 'ஏ மாயே சேசாவே’ படத்தில் சமந்தாவின் நடிப்பு மட்டுமின்றி சின்மயியின் குரலும் பெரும் புகழ் பெற்றது. சின்மயி குரலுக்கென தெலுங்கில் பிரத்யேக ஆடியன்ஸ் உருவாகினர்.


 






முன்னதாக பிரபல யூடியூப் சானலுக்கு பேட்டியளித்த பாடகி சின்மயி, தமிழில் பாட, டப்பிங் பேச வாய்ப்பு குறைவாக வருகிறது என்றும், தெலுங்கில் டப்பிங், பாடல் என பல விஷயங்கள் செய்வதாகத் தெரிவித்திருந்தார். 


”]தமிழில் விதிக்கப்பட்டுள்ள தடையை தாண்டியும் இசையமைப்பாளர்கள் கோவிந்த் வசந்தா, நிவாஸ் கே பிரசன்னா, அஸ்வின் விநாயக மூர்த்தி, ஜிப்ரான் உள்ளிட்டவர்கள் பாட அழைக்கிறார். டப்பிங் பொறுத்தவரை மித்ரன் போன்றோர் முன்வந்து பணியாற்ற சொல்கின்றனர். டப்பிங்கில் என்னை பணிசெய்ய தடைவிதிக்க கூடாது என இடைக்கால தடை உள்ளது. ஆனால் ராதாரவி இந்திய சட்டத்தைப் பின்பற்றாமல் தனி சட்டத்தைப் பின்பற்றுகிறார் போல” எனவும் சின்மயி அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.