உலக அளவில் மிகவும் பிரபலமான ராப் பாடகி ரிஹானா (Rihanna), அவருடைய கணவர் ராக்கி (A$AP Rocky,) இருவரும் தங்களது முதல் குழந்தையை வரவேற்க தயாராகிவிட்டனர். ரிஹானா கர்ப்ப கால போட்டோஷூட்டில் (pregnancy photoshoot), தனது மகப்பேறு அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.
அமெரிக்காவில் பிபரல ஃபேசன் பத்திரிக்கையான Vogue-இன் மே மாத இதழின் கதாநாயகி ரிஹானாதான். இந்த இதழின் அட்டைப்படத்திற்கு நடத்தப்பட்ட ஃபோட்டோ ஷூட்டின்போது, ரிஹானா குழந்தைப்பேறு மற்றும் அது தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
"நான் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும், இனி எப்படி ஷாப்பிங் செல்வது என்று நினைத்தேன். தாயான பின்பு, ஆடை அணிவது மிகவும் வேடிக்கையாக உள்ளது. அதாவது ஃப்ன் ஆக இருக்கிறது. நான் வழக்காம அணியும் ஆடைகளை இந்தக் காலத்தில் என்னால் அணிய முடியவில்லை. என் உடலில் மாற்றம் ஏற்படுகிறது. என் குழந்தை வளர்கிறது. அதனால், பெரிதாக இருக்கும் என் வயிற்றுப்பகுதியை நான் மறைந்து விடப் போவதில்லை. தாயாகும் முன்பு எப்படி ஃபேசனாக உடை அணிந்தேனோ, இனியும், என் உடல் மாறுதல்களுக்கு ஏற்றவாறு ஃபேசனாக ஆடைகளைத் தேர்ந்தெடுப்பேன் " என்று கூறினார்.
கர்ப்பிணி பெண்களின் உடைகள் பற்றி நிலவும் பல்வேறு விமர்சனங்களுக்கு இடையில், அதை பற்றி கூறுகையில், "கர்ப்பிணிப் பெண்களுக்கு இதுதான் கண்ணியமான உடை என்று நிலவும் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அதுபோன்ற கருத்துக்களை, என் ஆடைத் தேர்வுகள் மூலம் மறுவரையறை செய்ய முடிந்தது என்று நான் நம்புகிறேன். என் உடல் இப்போது நம்பமுடியாத ஆச்சரியமான விஷயங்களைச் செய்கிறது. எதிர்கொள்கிறது. அதற்காக நான் வெட்கப்படப் போவதில்லை. இதை கொண்டாட்டமாக உணர வேண்டிய நேரம். ஏனென்றால், உங்கள் கர்ப்பத்தை ஏன் மறைக்க வேண்டும்?” என்று கூறினார். கர்ப்பிணி பெண்களின் உடைகள் குறித்து இருக்கும் முற்போக்கான கருத்துக்கள் மாற வேண்டும் என்பதை அறிவுறுத்தி உள்ளார்.
கர்ப்பத்தைப் பற்றி அவர் பேசுகையில், " கர்ப்ப காலத்தில் என் முன் உள்ள சவால்களை ஏற்றுக்கொள்கிறேன். தாய்மையின் பயணத்தில் கிடைக்க இருக்கும் அனுபங்கள் குறித்து உணர ஆர்வமாக இருக்கிறேன். தாய்மை பயணத்தில் என்னை ஒப்படைத்து விட்டேன் என சொல்லலாம். என்னுள் ஏற்படும் மாற்றங்களை நான் மகிழ்வுடன் அனுபவிக்கிறேன். என் அம்மா பாட்டியாக என் குழந்தையை வரவேற்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.” என்று கூறி நெகிழ்ச்சியடைந்தார்.