தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


சந்தோஷ் நாராயணனுக்கு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தான் சொந்த ஊர். பொறியியல் பட்டதாரியான அவருக்கு சிறு வயதில் இருந்தே  இசையின் மீது அதீத ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக இசைக்கான பல தளங்களில் உதவியாளராக பணியாற்றினார். 2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்குநாக அறிமுகமான அட்டகத்தி படம் வெளியானது. இந்த படத்தில் தாஜ் இசையமைப்பாளராக எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் இடம்பெற்ற “ஆடிப்போனா ஆவணி”, “ஆசை ஒரு புல்வெளி”, "நடுக்கடலில் கப்பலை இறங்கி தள்ள முடியுமா ?" என விதவிதமான பாடல்களை கொடுத்து கவனிக்க வைத்தார். 






அன்றைய ஆண்டின் சிறந்த பாடல்களாக இடம்பெற்ற நிலையில் சந்தோஷ் நாராயணும் கொண்டாடப்பட்டார். சூழலுக்கு ஏற்ற இசையை சந்தோஷ் கில்லாடி தான். அதேபோல் பிஜிஎம் மியூசிக்கிலும் உருகவும், உணர்ச்சி வசப்படவும் வைத்து விடுவார். பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், எனக்குள் ஒருவன், 36 வயதினிலே, இறுதிச்சுற்று, காதலும் கடந்து போகும், மனிதன், இறைவி, கபாலி, காலா, கொடி, காஷ்மோரா, பைரவா, மேயாத மான், பரியேறும் பெருமாள், கர்ணன், ஏ1, ஜிப்ஸி, பாரிஸ் ஜெயராஜ், கர்ணன், சார்பட்டா பரம்பரை, மஹான், கடைசி விவசாயி, சித்தா என ஏகப்பட்ட தமிழ் படங்களுக்கு கடந்த 12 ஆண்டுகளில் இசையமைத்துள்ளார். 






சுதந்திரமான இசையை விரும்பும் சந்தோஷ் நாராயணன், எந்த ஹீரோ என்றெல்லாம் பார்ப்பதில்லை. தன்னை சுதந்திரமாக செயல்பட விட்டால் சிறப்பான இசையை தருவேன் என சொல்லி விடுவாராம். துள்ளலான இசை தொடங்கி சோகத்தை பிழிய வைக்கும் இசை வரை எல்லாம் நம்மவருக்கு கைவந்த கலையாகும். கடந்த சென்னை பெருவெள்ளத்தின்போது தன்னால் இயன்ற உதவிகளை செய்து பாராட்டைப் பெற்றார். 


திறமை இருந்தால் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமரலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். ச.நா என அன்போடு அழைக்கப்படும் சந்தோஷ் நாராயணன் சினிமா துறையில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் மென்மேலும் உயர வாழ்த்துகள்..!