இந்திய திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற இசையமைப்பாளராகிய இசைஞானி இளையராஜாவுக்கு கடந்த புதன்கிழமை நியமன எம்.பி. பதவியை மத்திய அரசு வழங்கியது. அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 






இந்தநிலையில், அமெரிக்காவின் சீட்டல் என்ற பகுதியில் இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்று இருப்பதாக தகவல் பரவி வந்தது. அதை நிரூபிக்கும் விதமாக ஏதோ ஒரு பிரமாண்ட மாளிகை முன்பு இசைஞானி இளையராஜா எடுத்துகொண்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், இசைஞானி இளையராஜாவிற்கு பின்பு வானவேடிக்கை வெடிக்க, அதை இசைஞானி ரசிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன






முன்னதாக, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக இருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்துள்ளார்.


அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றுபவர் இளையராஜா. அவர் பல ஆண்டுகள் தமிழ் திரையுலகின் இசைத்துறையில் அரசாட்சி செய்து வந்தார். அவர் 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். 5 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். 79 வயதாகும் இளையராஜாவை இந்திய அரசு 2010 ஆம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. அதன் பின் 2018 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. தற்போது நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதனை தொடர்ந்து இளையராஜாவுக்கு சமூக வளையதலங்களில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர் என பல்வேறு தரப்பினர் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண