தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ எனக்கு தெரியுது. நான் ப்ரேக்ல இருக்கேன். அஜித்சார் வந்து இந்த படம் நீதான் பண்ற அப்படி என்று சொன்னார். அவரே வீட்டுக்கு வந்து சொன்னார். நான் உனக்கு படம் தர்றேன். நீ உன்னோட பெஸ்டை கொடு.
அஜித் தந்த வாய்ப்பு:
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திற்கு பிறகு 3, 4 வருஷத்துக்கு எனக்கு எந்த படமும் கிடையாது. பூவெல்லாம் கேட்டுப்பார் படம் அந்தளவு சரியா போகல. அதுக்குப்பிறகு தீனா படம் வருது. தீனாவோட துள்ளுவதோ இளமை வருது.” இவ்வாறு அவர் கூறினார்.
தீனா படத்தில்தான் முதன்முதலாக யுவன்ஷங்கர்ராஜா அஜித்குமாரின் படத்திற்கு இசையமைக்கத் தொடங்கினார். யுவன்ஷங்கர்ராஜா இசையில் ஏ.ஆர்.முருகதாஸ் இசையமைப்பாளராக அறிமுகமான தீனா படம் அஜித் திரை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மூன்று பேருக்கும் மாபெரும் வெற்றியை தீனா படம் வந்தது. இந்த படத்திற்கு பிறகு யுவன்சங்கர்ராஜா துள்ளுவதோ இளமை, ஏப்ரல் மாதத்தில், மெளனம் பேசியதே, வின்னர், காதல் கொண்டேன், பேரழகன், 7 ஜி ரெயின்போ காலனி என்று தனது இசை சாம்ரஜ்யத்தை தொடங்கினார்.
யுவன்ஷங்கர் ராஜா முதன்முதலில் 1997ம் ஆண்டு அரவிந்தன் என்ற சரத்குமார் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின்பு, 1999ம் ஆண்டு அவர் இசையில் பூவெல்லாம் கேட்டுப்பார் படம் வெளியானது. பின்னர், அதே ஆண்டு உனக்காக எல்லாம் உனக்காக படம் வெளியானது.
அஜித் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி:
தீனா படம் 2000ம் ஆண்டு வெளியானது. பூவெல்லாம் உனக்காக, உனக்காக எல்லாம் உனக்காக, ரிஷி படங்களுக்கு பிறகு யுவன்ஷங்கர் ராஜா பட வாய்ப்பு இல்லாமல் இருந்த தருணத்தில் அஜித்குமாரே நேரில் சென்று வாய்ப்பு வழங்கியதாக யுவன்ஷங்கர் ராஜாவே கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் – யுவன்ஷங்கர் ராஜா இசைக்கூட்டணியில் தீனா, ஏகன், பில்லா, ஆரம்பம், மங்காத்தா, பில்லா 2, வலிமை படங்கள் வெளியானது. இதில், வலிமை தவிர மற்ற படங்கள் அனைத்தின் பின்னணி இசையும், பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் மிகப்பெரிய வெற்றி பெற்ற பி.ஜி.எம்.களை உருவாக்கியவர் யுவன்ஷங்கர்ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன்ஷங்கர் ராஜா கடைசியாக வெங்கட்பிரபு இயக்கிய விஜய் நடித்த கோட் படத்திற்கு இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.