சாம் சி.எஸ்:
தமிழ் சினிமாவின் முன்ன்ணி இசையமைப்பாளர்களுள் ஒருவரான இசையமைப்பாளர் சாம் சி.எஸ் விக்ரம் வேதா, கைதி, மாநகரம் உட்பட0 திரைப்படங்களுக்கு பாடல்களும் பின்னணி இசையமைதிருந்தாலும் சாம் சி.எஸ் இசையமைத்த சில படங்களின் பாடல்கள் மட்டுமே ரசிகர்களிடம் கவனம் பெற்றிருக்கின்றன. சமீபத்தில் வெளியான வணங்கான் , புஷ்பா 2 ஆகிய படங்களின் பின்னணி இசை அமைத்து கொடுத்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய கதை , கைதி , இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களின் பாடல்கல் பெரியளவில் ஹிட் அடித்திருக்கின்றன. ஆனால் தனது பாடல் திறமையை நிரூபிக்க எனக்கு வாய்ப்பு அமையவில்லை இசையமைப்பாளர் சாம் சிஎஸ் என்று பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.
என் மீது ஒரு பிம்பம் உள்ளது:
அவர் பேசியதாவது “எனக்கு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஒரு படம் அமைந்தது, அதில் போட்ட பாடல்கள் அனைத்தும் ஹிட். ஆனால் அதன் பிறகு எனக்கு வந்த படங்கள் எல்லாம் கொலை, கற்பழிப்பு சம்பந்தப்பட்ட க்ரைம் படங்கள் தான் அதிகம் வருகின்றன. அதனால் எனது பாடல் திறமையை நிரூபிக்க எனக்கு வாய்ப்பு இல்லை. எல்லோரும் நான் பின்னணி இசை நல்லா பண்ணிடுவேன்னு சொலுவாங்க. எனக்கு கைதி நல்ல படமா அமைந்தது, ஆனால் அந்த படத்தில் பாடலே இல்லை, அதே போல் அடங்க மறு என்கிற படத்தில் சயாலி என்ற ஒரே ஒரு பாடல் தான் போட்டேன் அது நல்ல ஹிட். ”
பெரிய ஹீரோ படம் பண்ண ஆசை:
”எனக்கும் கமர்சியலாக பாடல்கள் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கு, ஆனால் அப்படிப்பட்ட படங்கள் எனக்கு வரவில்லையே, எனக்கு நல்ல படங்கள் பண்ற சந்தோசம் இருக்கு ஆனால் என் கூட இருக்குறவங்களுக்கு அது இல்லை, நீ விஜய் சார் படம் பண்ணல், அஜித் சார் படம் பண்ணல, ரஜினி சார் கூட படம் பண்ணல, எல்லாருக்மே ஒரு பெஞ்ச் மார்க் என்னவென்றால் நாம என்ன படம் என்கிறதை விட யாருக்காக படம் பண்றோம் என்பதை தான் பாக்குறாங்க. இப்போ ஒரு இயக்குனரை எடுத்துக்கொங்க அவர் ஊருக்கு போய் படம் பண்றேன்னு சொன்ன உடனே படத்துடைய கதையை யாரும் கேட்கமாட்டாங்க யாரு ஹீரோ என்று தான் கேப்பாங்க. ”
அதனால் எனக்கு புதியதாக எதாவது வித்தியாசத்தை காட்ட முயற்சி செய்யும் போது அந்த வித்தியாசத்தை யாருக்காக பண்றோம் என்பது முக்கியம், அதனால் வருங்காலத்தில் பெரிய படங்களில் பணியாற்ற விரும்புகிறேன் என்றார் சாம் சி.எஸ்