தமிழர் திருநாளான பொங்கல் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பொதுமக்கள் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், பொங்கல் பொங்கியும், பொங்கலோ பொங்கல் எனக் கூவி இவ்விழா கொண்டாடப்படுகிறது. நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்துகளையும் அன்பையும்  பரிமாறி மகிழும் திருநாளாக இருக்கிறது பொங்கல் விழா.  இன்றைய தினத்தில் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். 






இந்நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக பொங்கல் பாடல் இன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி. அவரே இசையமைத்து உருவாக்கியுள்ள பொங்கலோ பொங்கல் இது பாடலை இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். எனது மகளின் பொங்கல் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி. அனைவரும் கேட்டு மகிழுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.பவதாரணியின் பொங்கல் பாடலுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்


 



முன்னதாக பொங்கல் தினத்தை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்


தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்,



தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்! கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.






தமிழகத்தின் எழுச்சிமிகு கலாசாரத்தின் அடையாளம் பொங்கல் எனபிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.











அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்


 






அனைவருக்கும் என்னுடைய இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ள எம்பி கனிமொழி, வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்