தமிழகத்தில் ஜனவரி ஒன்றாம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் இந்து கோயில்களில் நள்ளிரவு இரவு 12 மணிக்கு நடை திறந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதில்லை. ஆகம விதிப்படி நள்ளிரவில் கோயில்களை திறந்து வழிபட அனுமதி இல்லை. மார்கழி மாதத்தில் கோயில்கள் அதிகாலை 3:30 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆங்கில புத்தாண்டன்று திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த சில நாட்களாக ஐயப்ப பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் பக்தர்களின் வருகையால் அண்ணாமலையார் கோயிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
மேலும் தற்போது ஆங்கில புத்தாண்டு என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் ஆங்கில புத்தாண்டு நாள் என்பதால் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர். வெளி மாநில பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலையில் இருந்தே பணியை கூட பொருட்படுத்தாமல் கோயிலுக்கு வந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் திருவண்ணாமலையில் பௌர்ணமி நாட்கள் மட்டுமின்றி தற்போது அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோயிலில் திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இசைஞானி இளையராஜா காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, அப்படியே அங்கு இருந்து நேரடியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வந்து இளையராஜா சாமி தரிசனம் செய்தனர். அவருக்கு கோயிலின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் அருள்மிகு அண்ணாமலையார் பக்தர்கள், விழாவினர் மற்றும் அப்பர் உழவாரப்பணி சிவனடியார்கள் திருக்கூட்டமும் இனைந்து 27ம் ஆண்டு மார்கழி மாத லட்டு உபய விழாவினை இறைவன் அருள்மிகு அண்ணாமலையார் தரிசனம் செய்து வரும் பக்தர்களுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டு வழங்கினார்கள்.