சாம் சி.எஸ்


2010 ஆம் ஆண்டு வெளியான ஓர் இரவு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அடுத்தடுத்து படங்களில் பணியாற்றினாலும் விக்ரம் வேதா படம் இவருக்கு பெரியளவில் கவனம் பெற்றது. சுமார்  60 திரைப்படங்களுக்கு பாடல்களும் பின்னணி இசையமைதிருந்தாலும் சாம் சி.எஸ் இசையமைத்த சில படங்களின் பாடல்கள் மட்டுமே ரசிகர்களிடம் கவனம் பெற்றிருக்கின்றன. சமீபத்தில் வெளியான வணங்கான் , புஷ்பா 2 ஆகிய படங்களின் பின்னணி இசை வரை இவர் பணியாற்றியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய கதை , கைதி , இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களின் பாடல்கல் பெரியளவில் ஹிட் அடித்திருக்கின்றன. தான் ஏன் மக்களால் அதிகம் பேசப்படவில்ல என்பது பற்றி சாம் சி.எஸ் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் அதில் அவர் கீழ்வரும்படி கூறியுள்ளார்


ஒரு பாட்டு ஹிட் ஆவது திறமையால் மட்டுமில்லை


ஒரு மிகபெரிய படத்தில் என்னுடைய பாடல் வெளியாகிறது என்று வைத்துக் கொள்ளலாம். அந்த பாடல் வெளியாவதற்கு முன்பு அதைப் பற்றி ஒரு பில்டப் வரும். இன்னும் 4 நாள் , 3 நாள் என அந்த பாட்டைப் பற்றிய பில்டப் வரும். இந்த பில்டப் நம்மகிட்ட இல்ல. அது இல்லை என்றாலும் கவலை கிடையாது. ஏனால் இதுவரை என்னுடைய பாட்டை ப்ரோமோட் செய்ய நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்தது இல்லை. நிறைய பேர் ஏன் என்னுடைய பாட்டு எதுமே ஹிட் ஆகவில்லை என்று கேட்பார்கள். ஆனால் அதே வாரத்தில் வெளியாகி ஹிட் ஆன மற்ற பாடல்களுக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். அந்த தொகை என்  சம்பளத்திற்கு இனையானதாக இருக்கும். ஒரு பாட்டை திறமையாக உருவாக்கினால் மட்டும் போதால். திறமை என்பது ஒரு சட்டை போட்டு வருவது மாதிரி அவசியமான ஒன்று. ஆனால் ஒரு பாட்டு ஹிட் ஆவதற்கு திறமை மட்டும் போதாது. அதற்கு பின்னால் நிறைய பொருட்செலவுகள் இருக்கு. அதற்கு பின்னால் பெரிய லாபியே இருக்கு.  என்னை நானே ப்ரோமோட் செய்துகொள்ள வேண்டும் . என்னை நானே பிராண்ட் பண்ண வேண்டும். எனக்கு ஃபோன் செய்தால் ஈஸியாக எடுக்க கூடாது. ஒரு பாட்டு கேட்டால் அதை உடனே முடித்து கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் நம்ம கிட்ட நிறைய கரெக்‌ஷன் சொல்வாங்க. இதுவே கடைசி நேரத்தில் கொடுத்தால் நேரம் இருக்காது அதை அப்படி படத்தில் வைத்திருவார்கள். இதெல்லாம் எனக்கு மற்றவர்கள் கொடுத்த டிப்ஸ் " என்று சாம் சி.எஸ் கூறியுள்ளார்.