ஹாரிஸ் ஜெயராஜ்
ஒருபக்கம் ஏ.ஆர் ரஹ்மான் ரசிகர்கள் மற்றும் இளையராஜா ரசிகர்கள் அடித்துக் கொண்டிருக்க எந்த வித மோதலும் இல்லாமல் சாந்தமாக இருப்பவர்கள் ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகர்கள். கெளதம் மேனன் இயக்கிய மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு ரஹ்மானின் ஸ்டுடியோவில் பிரோகிராம்மராக எக்கச்சக்கமான பாடல்களுக்கு பணியாற்றியுள்ளார். 2000 முதல் 2015 வரை ஹாரிஸ் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களை ஆட்டி படைத்திருக்கின்றன. சமீப காலங்களில் தலைவர் ஃபார்ம் அவுட் ஆகி இருந்தாலும் மறுபடியும் கம்பேக் கொடுப்பார் என்ற ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
விஜயின் 10 படங்களுக்கு நோ சொன்னது ஏன் ?
பொதுவாக நேர்காணல்களில் பங்கேற்காத ஹாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். இந்த நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த வரிசையில் விஜயின் 10 படங்களுக்கு நோ சொன்னதாக அவர் தெரிவித்தது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கான காரணத்தையும் அவர் இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
"விஜய் அவருடைய ஒவ்வொரு படத்திற்கு எனக்கு ஃபோன் செய்வார். நான் எடுக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்வேன். என்னால் அதிகம் அழுத்தத்தை எடுத்துக் கொள்ள முடியாது. அதனால் ஒரு நேரத்தில் ஒரு படத்தில் வேலை செய்தாலும் அதில் முழு மனதுடன் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பேன். யூத் , சச்சின் , காவலன் , வேலாயுதம் என அடுத்தடுத்து பத்து படங்களுக்கு நோ சொல்லியிருக்கிறேன். 11 ஆவது படம்தான் நண்பன். நண்பன் படம்தான் எனக்கு சரியான படமாக தோன்றியது. அதன் பிறகு துப்பாக்கி படத்தில் அவரை பாட வைத்தேன். அவர் ரொம்ப நாளாக பாடாதது மாதிரி எனக்கு ஒரு ஃபீல் இருந்தது. விஜய் கொஞ்சம் நர்வஸாக இருந்தார். அதன் பின் அவரை சென்னை மற்றும் மும்பையில் அந்த பாடலை பாட வைத்தோம்." என அவர் தெரிவித்துள்ளார்
விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. பூஜா ஹெக்டே , பாபி தியோல் , பிரகாஷ் ராஜ் , கெளதம் மேனன் , பிரியாமணி , மமிதா பைஜூ ஆகியோ இப்படத்தில் நடித்து வருகிறார்கள் , அனிருத் இசையமைக்கிறார் , கே.வி.என் ப்ரோடக்ஷ்னஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.