பிரியாத ஜோடியாய், நீண்ட நாள் இல்லற வாழ்வில் இருந்த தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவுக்கு பின், அவர்கள் முடிவு என்ன, திட்டம் என்ன என்கிற கேள்விகள் எல்லாம் எழத் தொடங்கியது. ஆனால், தனுஷ் ஒரு பக்கம் சூட்டிங் நடித்திக் கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா... இன்னொரு பக்கம், தன் பெயருக்கு பின்னால் இருந்த தனுஷ் என்கிற பெயரை நீக்கிவிட்டு, தனது தந்தையான ரஜினிகாந்த் பெயரைச் சேர்த்துக் கொண்டார். 




சரி... இத்தோடு இனி அவரவர் வேலையை பார்ப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மீண்டும் இயக்கத்தில் இறங்கியுள்ளார் .இந்த முறை மெகா திரைப்படமாக களத்தில் இறங்க உள்ளார். டிப்ஸ் பிரனவ் அரோரா உடன் இணைந்து முஷபீர் என்கிற இந்தி படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தி மட்டுமல்லாது, அதே படம் தமிழில் பயணி, தெலுங்கில் சஞ்சாரி, கன்னடத்தில் சச்சாரி, மலையாளத்தில் யாத்திரக்காரன் என 5 மொழிகளில் இத்திரைப்படம் தயாராகி வருகிறது. 




படத்தின் முதல் போஸ்டரை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. அதில் நீண்ட நெடிய சாலை ஒன்றில் ஒரு டிவிஎஸ் 50 வாகனம் நிற்கும் படியாக உள்ளது. ஹெட் லைட் இல்லாமல், விசித்திரமான தோற்றத்தில் நிற்கிறது அந்த மொபட். இதற்கு முன், வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் பயன்படுத்திய மொபட், பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது ஐஸ்வர்யா காட்சிப்படுத்தியிருக்கும் மொபட்டும், கிட்டத்தட்ட அதே தோற்றத்தில் தான் உள்ளது. 






முதன் முதலாக பிறமொழி படங்களில் கால் எடுத்து வைக்கும் ஐஸ்வர்யா, தனது கணவரின் நினைவாகவே இந்த மொபைட்பை பயன்படுத்தியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. பிரிந்தாலும், அவர் நினைவில் தனுஷ் இருக்கிறார் என்பதன் விளைவே, இந்த காட்சிப்பயன்பாடு என்கிறார்கள். அதே நேரத்தில், தனுஷ் இந்தி படங்களில் நடித்து வரும் நிலையில், தானும் பாலிவுட் களத்தில் இறங்கி, தனுஷிற்கு இணையாக இயக்கத்தில் கால் பதிக்க முடியும் என்பதை காட்டுவதற்காகவே ஐஸ்வர்யா இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். எது எப்படியோ... படம் வெளியாகும் முன்வே, போஸ்டரின் இடம் பெற்றுள்ள படம், எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.