தன்னைவிட 9 வயது குறைவான இளைஞரை நடிகை முன்முன் தத்தா காதலிப்பது உறுதியாகியுள்ளது.
தாரக் மேத்தா கா உல்டா சஸ்மா 'Taarak Mehta Ka Ooltah Chashmah' என்ற பிரபல இந்தித் தொடரில் நடித்து வருபவர் தான் முன்முன் தத்தா. இவரது ஒரிஜினல் பெயரான முன்முன் தத்தாவைவிட இவர் தொடரில் கொண்டுள்ள பபிதா ஐயர் என்ற பெயர் தான் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இவர் பிறந்தது மேற்குவங்கத்தின் துர்காபூரில். முன்முன் தத்தா சிறு வயதிலேயே ஆகாஷவாணி,
தூர்தர்ஷன் போன்ற அரசு ஊடகங்களில் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆங்கில இலக்கியம் பயின்ற இவர் பின்னாளில் புனேவில் பேஷன் டிசைனிங் பயின்றார். மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர் நடிப்பிலும் தலைகாட்டினார்.
மும்பை வந்த அவர் முதலில் 2004 ஆம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியில் ஹம் ஹம் சம் பார்தி Hum Sab Baraati என்ற தொடரில் நடித்தார். வெள்ளித்திரையில் இவரது முதல் தோற்றம் கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம். அதன் பின்னர் 2006ல் ஹாலிடே என்ற படத்தில் தலையைக் காட்டினார். 2015ல் தின்சக் என்டர்ப்ரைசஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
சப் தொலைக்காட்சியில் வெளியாகும் தாரக் மேத்தா கா உல்டா சஸ்மா 'Taarak Mehta Ka Ooltah Chashmah' என்ற தொடர் இவருக்கு மிகப் பெரிய அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
நீல் டெலிஃபிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தி நகைச்சுவை தொலைக்காட்சி நாடகத் தொடரான இது கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சப் தொலைக்காட்சியில் பல்வேறு பாகங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் இதழியலாளர் தாரக் மேத்தா குஜராத்தி வார இதழ் சித்திரலேகாவில் எழுதிவந்த துனியா நே ஊந்தா சஷ்மா என்ற கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டது.
இந்தத் தொடரின் லேட்டஸ்ட் எபிஸோட்களின் நாயகி தான் முன்முன் தத்தா.
இந்நிலையில் முன்முன் தத்தா தனது சக நடிகர் ராஜ் அனத்கட்டை காதலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அனத்கட் இந்தத் தொடரில் தபு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முன்முன் தத்தாவைவிட அனத்கட்டுக்கு 9 வயது குறைவு. இருந்தாலும் இவர்களுக்கு இடையே அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவதாக அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்தே இருப்பதாகவும் விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
குடும்பம், சூட்டிங் ஸ்பாட் என அனைவருக்குமே இந்த காதல் விவகாரம் தெரிந்திருந்தாலும் கூட முன்முன் குப்தாவும், அனத்கட்டும் காதலை உறுதிப்படுத்தவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளுக்கு...