FIR Against Ranveer Singh: ரன்வீர் சிங் மீது எஃப்ஐஆர் பதிவு... வாக்குமூலம் பதிவு செய்தார் பாலிவுட் நடிகர் 


தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங். தனது முதல் படமான "பேண்ட் சர்மா பாராத்" என்ற முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்ததன்  மூலம் மிகவும் பிரபலமானார். எப்பவுமே தனக்கென ஒரு தனி ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் கொண்டவர் ரன்வீர் சிங். ஃபேஷன், மடலிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ரன்வீர் தனது ஹேர் ஸ்டையிலையும் அவ்வப்போது  மாற்றிக்கொள்வது அவரின் ஸ்பெஷலிட்டி.  சமீபத்தில் நடத்திய ஒரு போட்ஷூட் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


 



 


சர்ச்சையை கிளப்பிய நிர்வாண போட்டோஷூட்:


ரன்வீர் சிங் சமீபத்தில் நிர்வாண போட்டோஷூட் ஒன்றை தனியார் பத்திரிக்கை ஒன்றுக்காக நடத்தினார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் ரன்வீர் சிங். அது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி காட்டு தீபோல பரவியது. பலர் அதை எதிர்த்தாலும் சிலர் ஆதரிக்கவும் செய்தனர். 


ரன்வீர் சிங் மீது எஃப்ஐஆர் பதிவு:


அந்த வகையில் நடிகர் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டதற்காக அவர் மீது மும்பை காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அரசு சாரா அமைப்பின் அலுவலக அதிகாரியான லலித் டெக்சந்தனி, ஜூலை 26 அன்று செம்பூர் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்தார். ஆபாசமான புத்தகங்கள் விற்பனை செய்தல் மற்றும்  இளைஞர்களுக்கு ஆபாசமான பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67A படி பாலியல் செயல் அல்லது நடத்தை சம்பந்தமான எந்தவொரு பொருளையும் வெளியிடுவது தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. 






வாக்குமூலம் பதிவு:


அது தொடர்பாக மும்பையில் திங்கள்கிழமை அன்று ரன்வீர் சிங்கின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். திங்கள்கிழமை காலை 7 மணியளவில் விசாரணை அதிகாரி திரு. சிங் முன்னிலையில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்து காலை 9.30 மணியளவில் காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார். மேலும் ஒரு போலீஸ் அதிகாரி  கூறுகையில் தேவைப்பட்டால் மீண்டும் ஆஜராக அவர் அழைக்கப்படுவார் என கூறினார்.