வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி இந்திய சினிமா நாளாக கொண்டாடப்படுகிறது. அதனால் 4000 மேற்ப்பட்ட திறையில் 75 ரூபாய்க்கு டிக்கேட்டை வழங்கவுள்ளனர். இந்திய மல்டிபிளக்ஸ் திரையரங்கு அமைப்பின் சார்பாக இந்த அறிவிப்பு வெளியாகிவுள்ளது.







”2022-ன் முதல் நான்கு மாதங்களில் வெளியான கேஜிஎஃப், ஆர் ஆர் ஆர், விக்ரம் மற்றும் பூல் புலாயா 2 ஆகிய படங்களின் வெற்றியை அங்கிகரிக்க இந்த முடிவை எடுத்துள்ளனர். தேசிய சினிமா தினம் 4000- திற்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் நடைபெறும். அதில் பி.வி.ஆர், ஐநாக்ஸ், சினிபோலீஸ், 
கார்னிவல், மிராஜ், சிட்டி ப்ரைட், ஏசியன்,  முக்தா ஏ 2, மூவி டைம், வேவ், எம் 2 கே,  டிலைட் ஆகிய பல தியேட்டர்களில் நடக்கவுள்ளது.


சினிமாவை கொண்டாடும் ரசிகர்களுக்கு இது சமர்பணம், அவர்களால்தான் இந்த மாபெரும் வெற்றி கிடைத்தது. இந்த சினிமா தினம் எல்லா வயது மக்களையும் ஒன்றிணைக்கும் திருவிழாவாகும். இந்தியாவில் பாலிவுட் திரை மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழியில் நூற்றுக்கணக்கான படங்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.






சினிமா ஆப்ரேட்டர்கள் அனைவரும் இந்த வெற்றியினை கண்டு வியந்தனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கேஜிஎஃப், ஆர் ஆர் ஆர், விக்ரம் மற்றும் பூல் புலாயா 2 ஆகிய படங்களுடன்  ஹாலிவுட் படமான டாக்டர் ஸ்ட்ரேஞ், மாவெரிக் போன்ற படங்களும் நன்றாக வசூல் செய்தது. இது தொடர்பான விரிவான தகவல்கள் அனைத்தும், தியேட்டர்களின் வலைதளத்திலும், சோஷியல் மீடியாக்களிலும் வெளியாகும். #நேஷனல்சினிமாடே என்ற ஹாஷ்டாகை தொடர்ந்தால் பல தகவல்கள் கிடைக்கும்.” என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.