சீதாராமம் திரைப்படத்தின் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என ஒட்டுமொத்த திரையுலகம் முழுவதும் புகழ் பெற்றவர் மிருணாள் தாக்கூர்.


மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மிருணாள் தன் பள்ளிப்படிப்பை முடித்து மாஸ் மீடியா பட்டப்பிடிப்பை முடித்துள்ளார்.


இந்நிலையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே தொலைக்காட்சி சீரியல்களில் கவனம் செலுத்திய மிருணாள்,  2012ஆம் ஆண்டு ‘முஜ்சே குச் கெஹ்தியே காமோஷியான்’ எனும் சீரியல் மூலம் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார்.


அதனைத் தொடர்ந்து ஒளிபரப்பான ’கும் கும் பாக்யா’ தமிழில் ’இனிய இரு மலர்கள்’ தொடர் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுக் கொடுத்தது. அதேபோல் ’உள்ளம் கொள்ளை போகுதடா’ (இந்தியில் ’படே அச்சே லக்தே ஹே’) தொடர் மூலமும் மிருணாள் இந்தி தாண்டி தென்னிந்தியாவிலும் கவனம் ஈர்த்தார். 


இதனையடுத்து மராத்திய மொழியில் 2014ஆம் ஆண்டு ’விட்டி தண்டு’ எனும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான மிருணாள், லவ் சோனியா, சூப்பர் 30, பத்லா ஹவுஸ், டூஃபான் படங்களில் நடித்து ரசிகர்களைப் பெற்றார். 


ஆனால் சென்ற ஆண்டு வெளியான ‘சீதா ராமம்’ இவருக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுக் கொடுத்தது. ஹனு ரகுவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த மிருணாள், சீதாவாக டோலிவுட், தமிழ், இந்தி என பான் இந்தியா ரசிகர்களைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளினார்.


இதனையைடுத்து தற்போது இந்தியில் கும்ரா, பிப்பா உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் ’நானி 30’ படத்திலும் தற்போது மிருணாள் நடித்து வருகிறார்.


பான் இந்தியா ஸ்டாராக மிருணாள் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்,  அழுதபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிருணாள் பகிர்ந்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ந்து ஆழ்த்தியுள்ளது. 


நேற்று மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இன்று நான் வலிமையாகவும், புத்திசாலியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்! ஒவ்வொருவரது கதைகளிலும் அவர்கள் சத்தமாக படிக்காத பக்கங்கள் உள்ளன. ஆனால் என் பக்கங்களை நான் சத்தமாகப் படிப்பதை தேர்வு செய்கிறேன். ஏனென்றால் நான் கற்றுக்கொண்ட பாடத்தை யாராவது கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம்.


”அப்பாவியாகவும் பாதிக்கப்படக்கூடியவராகவும் ஒன்றும் பிரச்சனையான விஷயமில்லை” எனத் தெரிவித்து தன் கண்ணீர் மல்க தான் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். 




இந்நிலையில் தொடர்ந்து நேற்று மீண்டும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள மிருணாள், “அந்த ஃபோட்டோ எடுக்கப்பட்டபோது  நான் கவலையாக உணர்ந்தேன். ஆனால் இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்." என மகிழ்ச்சியுடன் மிருணாள் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க: Ponniyin Selvan 2 : பொன்னியின் செல்வன் 2: வந்தியத்தேவன் - குந்தவை காதல் காட்சிதான் பெஸ்ட்... சிலாகித்த சுஹாசினி மணிரத்னம்!